பாராங்கத்தியால் தாக்கினார்

சொத்து முகவர் ஒருவர் தன் னுடைய காதலியின் முன்னாள் காதலருக்குப் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற் காக அவரை ஒரு பாராங்கத்தி யால் தாக்கினார். அவருக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது. ஒன்பது பிரம் படிகள் கொடுக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கத்தி யால் வயிற்றில் தாக்கியதால் தாக்கப்பட்டவரின் குடலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என்று நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

வோங் கோலியாங், 34, என்ற அந்தச் சொத்து முகவர் தன்னுடைய காதலியின் முன்னாள் காதலருக்குப் பாடம் கற்பிக்க திட்டமிட்டார். அந்த முன்னாள் காதலர் திருமணம் ஆனவர் என்பதையும் அவருக்கு பிள்ளைகள் இருப்பதையும் காதலியிடம் தெரிவிக்கவில்லை என்பதற்காகவும் மற்ற பெண் களுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டதற்காக வும் அந்த முன்னாள் காதல ருக்குப் பாடம் கற்பிக்க முகவர் முடிவு செய்தார். முன்னாள் காதலரான பிரடெரிக் டோவுடன் தொடர்பு கொண்ட அந்த முகவர், அடுத்த நாளான சென்ற ஆண்டு மே 29ஆம் தேதி ஹில்வியூ டெர சில் தன்னை திரு டோ சந்திக்க வந்தபோது அவரைக் கத்தியால் தாக்கினார்.