19 மாதமாக தொடர்ந்து பணவீக்கம் இறங்குமுகம்

சிங்கப்பூரில் தொடர்ந்து 19வது மாதமாக கடந்த மே மாதம் பணவீக்கம் குறைந்தது. கடந்த 1977 முதல் ஆக அதிக காலத்திற்குத் தொடர்ந்து பணவீக்கம் குறைந்துவந்திருப்பது இப்போதுதான். சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற மாதம் பயனீட்டாளர் விலைக் குறியீட்டு எண் 1.6% இறங் கியது. இந்தக் குறைவு ஏப்ரலில் 0.5% ஆக இருந்தது. குடும்பச் செலவு, பயனீட்டுச் செலவு, போக்குவரத்துச் செலவு ஆகியவை பணவீக்கம் குறைய காரணமாக இருந் தன. இந்த விவரங்களை சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக தொழில் அமைச்சும் கூட்டறிக்கை ஒன்றில் குறிப்பிட்டன.

குடியிருப்புச் செலவு வருடாந்திர அடிப்படையில் 6.0% இறங்கியது. எரிபொருள், பயனீட்டுச் செலவு 9.5% குறைந்தது. தனியார் சாலை போக்குவரத்துச் செலவு வருடாந்திர அடிப்படையில் 7.6% குறைந்தது. தங்குமிடச் செலவு, தனியார் சாலை போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை நீக்கிவிட்டு கணக்கிடப்படும் மூலாதார பணவீக்கம் சென்ற மாதம் 1% கூடியது. இந்த அதிகரிப்பு ஏப்ரலில் 0.8% ஆக இருந்தது. இந்த மூலாதார பணவீக்கம் வரும் மாதங்களில் 0.0 முதல் 1% வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்சி ஓட்டுநர் சுயநினைவை இழந்ததே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 72 வயதான அந்த டாக்சி ஓட்டுநர் உட்பட மேலும் இருவர் காயம் அடைந்தனர். காணொளிப்படம்: ஃபேஸ்புக்/எஸ்ஜி ரோடு விஜிலன்ட்

24 Mar 2019

பாதசாரிகள் மீது டாக்சி மோதியதில் பெண் பலி

அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியிடம் (வலது) கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லிம் முன்னோடிகளின் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார் புதிய கண்காட்சியின் காப்பாளர் முகமது நசீம் அப்துல் ரஹீம். படம்: இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம்

24 Mar 2019

இந்திய முஸ்லிம்களின் மரபுடைமையை விளக்கும் புதிய கண்காட்சி