பிரதமர் லீ: பிரிட்டன் வெளியேறும் முடிவு ஒரு திருப்புமுனை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்று பிரிட்டன் வாக்களித்திருப்பது 'ஒரு திருப்பு முனை' என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கருத்துத் தெரி வித்துள்ளார். குடிநுழைவு மீதான பிரிட்டிஷ் மக்களின் உணர்வை யும் பிரிட்டிஷ் அடையாளத்தையும் இறையாண்மையையும் உயர்த்திப் பிடிக்கும் ஆவலையும் இந்த வாக் கெடுப்பு முடிவு பிரதிபலிப்பதாக திரு லீ குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்த கருத்து மீதான வாக்கெடுப்பு முடிவு வெளி யானதும் ஃபேஸ்புக் வாயிலாக பிரதமர் தமது கருத்துகளை வெளி யிட்டார். பிரிட்டன் எதிர்நோக்கிய அதே சவால்களை இதர வளர்ந்த நாடுகளும் எதிர்நோக்கி இருப் பதாக அவர் கூறினார்.

"நாம் அனைவரும் உலகமய மாக்கப்பட்ட, ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உலகில் வாழ்கி றோம். விடுபட வேண்டும் என்ற விருப்பத்தை இதர பங்காளிகள் தடுத்து நிறுத்தும் வாய்ப்பு குறைவு. சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பது முழுமையாக ஒரு நாடு எடுக்கும் முடிவு. "இதைப்போல நாடுகள் பல வும் விடுபடும் நிலை ஏற்பட்டால் அது பாதுகாப்புக் குறைவுக்கு இட்டுச் செல்லக்கூடும். வளம் குறையலாம். எதிர்காலம் மங்கக் கூடும்," என்று குறிப்பிட்ட திரு லீ, அடுத்த சில ஆண்டுகள் பிரிட்டனுக்கும் ஐரோப்பாவுக்கும் நிச்சயமற்றவையாக இருக்கும் என்றார்.

"பிரிட்டன் விலகிச் செல்வதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் இதர நாடுகளை எவ்வாறு பாதிக்கும்? ஆசியாவில் இருந்தாலும் அதே உலகமயமாக்கலில் இருப்பதால் நம்மை அது எவ்வாறு பாதிக் கும்? என்பதை எல்லாம் இப்போது சொல்வது கடினம். "இருப்பினும் அடுத்தடுத்து நடக்கவிருப்பவற்றை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டி யுள்ளது. பிரிட்டன் வெளியேறு வதால் ஏற்படும் எல்லா விளைவு களையும் யாராலும் கணித்து விடமுடியாது," என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இஸ்தானாவில் 2015 ஜூலை 29ஆம் தேதி சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம். (ராய்ட்டர்ஸ்)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!