இங்: சமூகப் பிணைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவோம்

முகம்மது ஃபைரோஸ்

பயங்க­ர­வாத மிரட்­டல்­களுக்கு இடையே வலு­வான சமூ­கப் பிணைப்பைக் கட்­டிக்­காப்­ப­தும் அனை­வ­ருக்­கும் சம­மான வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வ­தும் மிக­வும் முக்­கி­ய­மா­னவை என்று தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் கூறி­யுள்­ளார். "சிங்கப்­பூர் கட்­டிக்­காத்து வரும் சமூக ஒற்­றுமையை நாம் மெத்­த­ன­மாக எடுத்­துக்­கொள்­ளக் கூடாது. கடந்த ஓராண்­டில் மட்­டும் பேங்காக், பாரிஸ், பிர­சல்ஸ், ஜகார்த்தா, இஸ்­தான்­புல், லாகூர், அண்மை­யில் ஒர்­லாண்டோ என பல பயங்க­ர­வா­தத் தாக்­கு­தல்­களைப் பார்த்­துள்­ளோம். "தீவி­ர­வா­தி­களோ அல்லது அவர்­களைப் பின்­பற்­று­ப­வர்­களோ எக்­கா­ர­ணத்தைக் கொண்­டும் நமது அமை­தியை­யும் ஒற்­றுமையை­யும் குலைக்க நாம் வழி­வி­டக் ­கூ­டாது," என்று வலி­யு­றுத்­திய டாக்­டர் இங், சிங்கப்­பூ­ரர் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் இன, சமய ஒற்­று மையை வலுப்­படுத்­தும் பொறுப்பு இருப்­பதை மறுக்­க­லா­காது என்­றும் கூறினார்.

ஜாமியா சிங்கப்­பூர் அமைப்பு நேற்­றி­ரவு ஏற்­பாடு செய்த நோன்பு திறப்பு நிகழ்ச்­சி­யில் டாக்­டர் இங், சிங்கப்­பூர் ஆயு­தப்­படை அதி­கா­ரி­கள் சில­ரு­டன் பங்­கேற்­றார். "அண்டை வீட்­டா­ரு­டன் நாம் வெளிப்­படுத்­தும் செயல்­களும் பரி­மாற்­றங்களும் ஒரு வலு­வான, தாக்­குப்­பி­டிக்­கக் கூ­டிய, அனைத்து சமய, கலா­சார நடை­முறை­களை ஏற்­றுக்­கொள்­ளும் சமூ­கத்தை உரு­வாக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை," என்றார் அமைச்சர்.

"இத்தரு­ணத்­தில் சிங்கப்­பூர் ஆயு­தப்­படை­யில் இருக்­கும் முஸ்­லிம் படை வீரர்­களுக்­கும் நான் எனது நன்­றியைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். நோன்பைக் கடைப்­பி­டிக்­கும் அதே வேளை­யில் சிங்கப்­பூரைப் பாது­காக்­கும் தங் கள் கடமை­யில் இருந்­தும் முஸ்­லிம் வீரர்­கள் சளைப்­ப­தில்லை. அவர்­கள் இல­கு­வான பணி­களையோ சிறப்­புச் சலுகையையோ கேட்­ப­தில்லை. முஸ்­லிம் படை வீரர்­கள் கடுமை­யான பயிற்­சி­யி­லும் நல­மாக இருப்­ப­தில் அவர்­களின் படைத் தலை­வர்­கள் கூடு­தல் கவ­னம் செலுத்­து­கிறார்­கள்.

நேற்றிரவு நடந்த ஜாமியா சிங்கப்பூர் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்களுடன் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென். படம்: தற்காப்பு அமைச்சு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!