சமத்துவமான ஒருங்கிணைந்த சமூகத்தை நோக்கிய இலங்கையின் பயணம்

தமிழவேல்

அனைத்து சமயத்தினரும் சம உரிமைகளுடன் ஒருங்கிணைந்த சமூகமாக வாழும் எதிர்கால இலங்கை உருவாகும் என இலங்கையின் முன்னாள் அதிபர் சந் திரிகா பண்டாரநாயக்கே குமர துங்க நம்பிக்கையுடன் இருக் கிறார். அதற்கான முழு முயற்சியில் குறிப்பாக பல்லாண்டுகளாக ஒடுக் கப்பட்ட தமிழ் சமூகத்துடன் நட்பு ணர்வைப் பாராட்டி உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வையும் வடக்கு இலங்கை யையும் மேம்படுத்த தற்போதைய இலங்கை அரசு கடப்பாடு கொண் டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தவிர, இலங்கையைப் பல ஆண்டுகளாகப் பாதித்த உள் நாட்டுப் போர் 2009ல் முடிந்தது போல ஈவிரக்கமில்லாத கொடூர மான முறையில் கண்டிப்பாக முடி வடைந்திருக்கத் தேவையில்லை என்றும் அவர் கூறினார். "தீவிரவாதிகள் கொல்லப்பட்ட தில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் தேவையில்லாமல் பொதுமக்கள் கொல்லப்பட்டது, பின்பு போர்க் குற்றங்களை மறுத்து அனைத்துலக நாடுகளு டன் உறவை மோசமாக்கியிருக்கத் தேவையில்லை. இன்னும் சற்று காலம் எடுத்திருந்தாலும் அமைதி யான முறையில் தீர்வு கண்டிருக்க லாம்" என்றார் அவர்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழ கத்தின் தெற்கு ஆசிய ஆய்வுக் கழகத்தின் ஏற்பாட்டில் கார்ல்டன் ஹோட்டலில் நேற்று முன்தினம் நடந்த ஓர் உரையாடல் நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொள்ள சிங்கப்பூர் வந்திருந்தார் திருவாட்டி சந்திரிகா. 'தீவிரவாதமும் நாடும்: பூசல் களை மாற்றி அமைதியை உரு வாக்க' எனும் தலைப்பில் உரை யாற்றினார் திருவாட்டி சந்திரிகா.

பூசல்கள், தீவிரவாதம், அமைதி முயற்சி ஆகியவற்றுக்கு மிகவும் பரிட்சயமானவர் திருவாட்டி சந் திரிகா. பாரிசில் கல்வி கற்ற திருவாட்டி சந்திரிகா 1994ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பெண் அதிபர் ஆனார். அவர் ஆட்சியில் இருந்தபோது அமைதி யின் வழி உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அர சாங்கத்தில் சமத்துவத்தையும் ஒருங்கிணைந்த இலங்கையை உருவாக்கவும் பல முயற்சிகளை மேற்கொண்டார்.

கலந்துரையாடலில் இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமரதுங்க கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கிறார். படம்: தெற்காசிய ஆய்வுக் கழகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!