‘இஃப்தாரில்’ சமூகத்தின் பன்முகத்தன்மை

முஹம்மது ஃபைரோஸ்

உலகில் பல நாடுகளில் சமூகப் பிரிவினையால் பதற்றமிகுந்த சூழல் நிலவும் வேளையில் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட இரு நூறு ஆண்டுகளாக மக்கள் நல்லிணக்கத்துடனும் சகிப்புத் தன்மையுடனும் வாழ்வதாக வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். “ரமலான் மாதம் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சிகளில் முஸ் லிம் நண்பர்களுடன் பல இன, சமயங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்வது சமூகத்தின் பன்முகத்தன்மையைப் பிரதி பலிக்கின்றது. “சமூகத்தில் நிலவும் அமை தியையும் நல்லிணக்கத்தையும் இந்நிகழ்வுகள் கட்டிக்காக்கின்றன,” என்றார் டாக்டர் பாலகிருஷ்ணன்.

சவுத் பிரிட்ஜ் சாலை ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் நேற்று நடை பெற்ற சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் நோன்பு திறப்பு நிகழ்வில் (இஃப்தார்) கலந்துகொண்ட வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் (இடக்கோடி). வலப்பக்கத்தில் லீக்கின் தலைவர் திரு நசீர் கனி, துணைத் தலைவர் மு.அ. மசூது உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர். படம்: பெரித்தா ஹரியான்