சாங்கியில் ‘மலாயன் தபீர்’ பன்றி

அருகி வரும் விலங்கான 'மலாயன் தபீர்' பன்றி ஒன்று நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணிக்கு சாங்கி பகுதியில் தென் பட்டுள்ளது. அதைப் பார்த்த லியன்ஹ சாவ்பாவ் சீன நாளிதழின் வாசகர் ஒருவர் கம்பி வேலிக்கு அருகில் அது நடந்து செல்வதைப் புகைப்படம் எடுத்துள்ளார். 'ஏகர்ஸ்' எனும் விலங்கு அக்கறை ஆராய்ச்சி, கல்வி சங்கத்தின் துணைத் தலைமை நிர்வாகியான அன்பரசி பூபால் தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் அதற்குள் அந்த மிருகம் தங்கள் பார்வையிலிருந்து மறைந்து விட் டதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

"சிங்கப்பூரில் இந்த மிருகத்தைப் பார்க்க முடியாது. தென்ஜோகூரிலிருந்து அது நீந்தி இங்கு வந்திருக்கலாம்," என்றார் லீ கொங் சியான் இயற்கை வரலாற்று அரும்பொருளக அதிகாரி திரு மாக்கஸ்சுவா. தற்போது மலேசியாவில் 1,500 முதல் 2,000 'தபீர்' பன்றிகள் வரை மட்டும்தான் இருப்பதாக கருதப்படுகிறது.

சாங்கியில் கம்பி வேலிக்கு அருகில் நடந்து செல்லும் மலாயன் தபீர். படம்: சாவ்பாவ் வாசகர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!