அக்டோபர் முதல் காரில்லா ஞாயிறு ஏற்பாடு நீட்டிப்பு

நகரின் மையப்பகுதியில் கார் இல்லாத ஞாயிற்றுக்கிழமைகள் திட்டம் வரும் அக்டோபர் முதல் நீட்டிக்கப்படுகிறது. ஆறு மாதம் முன்னோடித் திட்டமாக அமல் படுத்தப்பட்ட இந்த ஏற்பாடு ஜூலையில் முடிவடைகிறது. மத்திய வணிக வட்டாரத்தை யும் குடிமை மாவட்டத்தையும் சுற்றியுள்ள சாலைகள் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று காலை நேரத்தில் வாகனங்களுக்கு மூடப்படும். இந்தத் திட்டம் ஜூலை மாதத் திற்குப் பிறகு இரண்டு மாதத் திற்கு இடம்பெறாது.

நகரச் சீரமைப்பு ஆணையம் இந்த ஏற்பாட்டை பரிசீலித்து பிறகு இதை அக்டோபர் முதல் மீண்டும் அமல்படுத்தும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார். அமைச்சர் நேற்று ஒரு நிகழ்ச் சியில் கலந்துகொண்டார். அதனையொட்டி அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். "கார் இல்லாத ஞாயிறு திட்டம் அட்டகாசமான ஒரு வெற்றி," என்று அமைச்சர் வர்ணித்தார். இந்தத் திட்டம் கடந்த பிப்ரவரி யில் தொடங்கியது. இதன்படி பல சாலைகள் கார்களுக்கும் இதர வாகனங்களுக்கும் மூடப்படும்.

அந்த நேரத்தில் மக்கள் குடும் பம் குடும்பமாகவும் தனியாகவும் நண்பர்களுடன் அந்தச் சாலை களில் நடந்தும் உலாவியும் காலில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டு ஓடிஆடியும் சைக்கிள் களில் சென்றும் மெதுஓட்டத்தில் ஈடுபட்டும் மகிழ்வதுண்டு. சிங்கப்பூர் கார்கள் நிறைந்த நாடாக இல்லாமல் மக்கள் மனமகிழ்ச்சி நிறைந்த நாடாகத் திகழவேண்டும் என்ற நோக்கத் துடன் அரசாங்கம் கார்களைக் குறைத்துக்கொள்ளும் அணுகு முறைக்கு ஊக்கமூட்டுகிற-து. அதன் ஒரு பகுதியாக கார் இல்லா ஞாயிறு இடம்பெறுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!