ஆக்டிவ் எஸ்ஜி காற்பந்து பயிலகத் திட்டம்

'சுறுசுறுப்பான சிங்கப்பூர் காற்பந்து பயிலகத்தின்' முதலாவது செயல் திட்டம் நேற்றுடன் முடிவடைந்தது. சென்ற மாதம் தொடங்கிய அந்தத் திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் நேற்று சிராங் கூன் விளையாட்டரங்கில் நட்பு முறைக் காற்பந்து நடந்தது. அதில் 312 சிறார்கள் கலந்து கொண்டார்கள். அந்தப் பயிலகத் தின் ஐந்து இடங்களைச் சேர்ந்த 6 முதல் 12 வயது வரையுள்ள அந்தச் சிறார்கள் மொத்தம் 14 வகுப்புகளில் தாங்கள் கற்றுக் கொண்ட திறமைகளை நேற்று வெளிப்படுத்தினர்.

ஜூரோங் ஈஸ்ட் விளையாட்டு அரங்கம், குவீன்ஸ்டவுன் விளை யாட்டு அரங்கம், சிராங்கூன் விளையாட்டு அரங்கம், உட் லண்ட்ஸ் விளையாட்டு அரங்கம், காலாங் கிரிக்கெட் திடல் ஆகிய ஐந்து இடங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல பிரபலங்களிடம் காற்பந்தைக் கற்றுக்கொண்டார் கள். அந்தப் பயிலகத்தின் முதல் வரான அலெக்சாண்டார் டூரிக், தேசிய காற்பந்து பயிற்றுவிப்பாளர் வி. சுந்தரமூர்த்தி முதலானோர் நேற்று சிராங்கூன் விளையாட்டு அரங்கில் சிறார்களுடன் கலந் துறவாடினர். இளநிலை வயதுள் ளவர்களுக்கான அடுத்த செயல் 10 வார திட்டம் ஜூலை 2ஆம் தேதி தொடங்கும். இதில் 13 முதல் 16 வரை வயதுள்ள சிறார்கள் கலந்துகொள்ளலாம். மேல் விவரங்களுக்கு: www.myactivesg.com.

'சுறுசுறுப்புமிக்க சிங்கப்பூர் காற்பந்து பயிலகத்தின்' ஜூன் விடுமுறை செயல் திட்டத்தின் கடைசிப் பயிற்சியில் தேசிய காற்பந்துக் குழு பயிற்றுவிப்பாளர் சுந்தரமூர்த்தி (இடது) பயிலகத் தின் தலைவர் டூரிக் (நடு) கலந்துகொண்டு பிள்ளைகளுடன் கலந்துறவாடினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!