குடிமைத் தற்காப்புப் படையின் பாவனைப் பயிற்சி

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று பின்னிரவு காலாங்-= பாயா லேபார் விரைவுச்சாலை (KPE) சுரங்கப் பாதையில் பாவனை அவசரகாலப் பயிற்சியை நடத்தியது. சுரங்கப்பாதையில் பெரும் விபத்து ஏற்பட்டு, வாகனங்களில் தீ பிடிப்பது, பலருக்குக் காயங்கள் ஏற்படுவது போன்ற பாவனைப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீயணைப்புப் பயிற்சி, காயமடைந்தவர்களை விரைவில் அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் போலிஸ் படை, நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை இணைந்து இந்தப் பயிற்சியை மேற்கொண்டன. இந்தப் பயிற்சிக்காக காலாங் - பாயா லேபார் விரைவுச்சாலை சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிறு அதிகாலை 5 மணி வரை மூடப்பட்டிருந்தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் செயல்முறை நடவடிக்கை களையும் அவசரகால தயார்நிலைத் திட்டங்களையும் உச்சநிலையில் புதுப்பித்துக் கொள்ளும் தொடர் முயற்சியின் ஓர் அங்கமாக இந்தப் பாவனைப் பயிற்சி நடத்தப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!