பணத்தைக் களவாடிய முன்னாள் பாலர் பள்ளி தலைமையாசிரியருக்கு சிறை

சுமார் $155,000 பணத்தைக் களவாடிய குற்றத்திற்காக முன்னாள் பாலர் பள்ளி தலைமையாசிரியர் ஒருவருக்கு நேற்று 16 மாதச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு ஜனவரி முதல் அதே ஆண்டு ஜூலை வரை கிண்டர்லேண்ட் எட்யூகேர் சர்வீசஸ் பாலர் பள்ளியின் லோரோங் புவாங்கொக் கிளையில் $69,334 பணத்தைக் கையாடல் செய்து நம்பிக்கை மோசடிக் குற்றத்துக்கு ஆளா னதை 49 வயது ஜெயலட்சுமி சோமசுந்தரம் ஒப்புக் கொண்டார். அவர் மீது சுமத்தப்பட்ட மேலும் மூன்று குற்றச் சாட்டுகள் தண்டனை விதிக்கப்படும்போது கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஜெயலட்சுமி அதன் கிளையை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தாகவும் பள்ளியில் பயிலும், புதிதாக சேரும் மாணவர்களிடமிருந்து பள்ளிக்கட்டணங்களை வசூலிக்கும் பொறுப்பும் அவரிடம் கொடுக்கப்பட்டதாகவும் மாவட்ட நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மோசடி நடந்த காலக் கட்டத்தில், ஜெயா மேற்பார்வையில் செயல்படும் கிளையில் நிறுவனத்தின் நிதிப் பிரிவு மேற்கொண்ட உள் தணிக்கையின்போது, கணக்குகளில் சில முரண்பாடுகள் தென்பட்ட தாக மூத்த அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜெயாவிடம் விசாரிக்கப்பட்டபோது, அந்த காலக்கட்டத்தில் பணத்தைக் கையாடல் செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!