ஷா ஹவுஸ் கட்டடத்துக்கு வெளியே ஆடவர் தாக்கப்பட்டார்

ஆர்ச்சர்ட் ரோடு, ஸ்கார்ட்ஸ் ரோடு சந்திப்பில் உள்ள ஷா ஹவுஸ் கட்டடத்துக்கு வெளியில் உள்ள நடைபாதையில் இந்திய ஆடவர் ஒருவரைத் தாக்கிய இருவருக்கு நேற்று சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது. கடந்த ஆண்டு மே 16ஆம் தேதி காலை வேளையில், 34 வயது திரு தர்மா கோவிந்தராஜ னைக் குத்தி, உதைத்து காயப் படுத்தியத்திற்காக முன்னாள் துப்புரவு மேற்பார்வையாளரான 32 வயது முகமது சரிஃபி சுராட்டுக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் சேர்ந்து ஆடவரை ஒரு முறை உதைத்த சரிஃபியின் மருமகனான 29 வயது அசிஃப் குர்னியவானுக்கு இரண்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட் டது.

மேலும் கடந்த மாதம் 24ஆம் தேதி 'மெத்தம்ஃபெடாமின்' போதைப் பொருளை உட்கொண்ட தற்காகவும் சரிஃபிக்கு கூடுதலாக ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை யும் மூன்று பிரம்படிகளும் விதிக் கப்பட்டன. சம்பவத் தினத்தன்று காலை 6 மணியளவில், சரிஃபி, தர்மாவை எதிர்கொண்டு தனது வருங்கால மனைவியிடம் தவறாக நடந்து கொண்டாயா என்று வினவியதாக வும் தர்மா அவரை புறக்கணித்த தால் சரிஃபி அவரைப் பல முறை தலையில் குத்தியதாகவும் தெரி விக்கப்பட்டது. நிலை தடுமாறி கீழே விழுந்த தர்மாவை சரிஃபி தொடர்ந்து தாக் கினர். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அசிஃப், தர்மாவை உதைத்தார் என்றும் விசாரணை யில் தெரிய வந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!