‘வாழும் ஆய்வுக்கூடம்’: $100 மில்லியன் ஒதுக்கீடு

துறைமுகம், தளவாடத் தொழில் துறைக்கு ஆதரவாக 'வாழும் ஆய்வுக்கூடம்' எனும் திட்டத்தை பிஎஸ்ஏ கழகம் நேற்று தொடங்கி வைத்துள்ளது. இதற்காக அக்கழகம் அடுத்த மூன்று ஆண்டுகளில் செலவழிக்க $100 மில்லியனை ஒதுக்கியுள்ளது. பொருளியல் வளர்ச்சிக் கழ கம், கடல்துறை, துறைமுக ஆணையம் ஆகியவற்றின் ஆதர வுடன் இயங்கும் 'பிஎஸ்ஏ வாழும் ஆய்வுக்கூடம்', பாசிர் பாஞ்சாங் முனையத்தில் இரண்டு செயல் முறை கப்பல் நிறுத்துமிடங்களைக் கொண்டிருக்கும்.

இதன் மூலம் புதிய தொழில் தொடங்கும் நிறுவனங்களும் தொழில்நுட்பத் தீர்வுகளை அளிக் கும் நிறுவனங்களும் பிஎஸ்ஏ உடன் இணைந்து பிஎஸ்ஏ சிங்கப்பூர் முனையங்களில் உண்மையான துறைமுகச் சூழ்நிலையில் தங்கள் ஒருங்கிணைந்த திட்டங் களைச் சோதித்துப் பார்த்துகொள்ளலாம்.

கொள்கலன் பரிமாற்றத்தில் உலகின் மிகவும் பரபரப்பான துறைமுக மையங்களில் ஒன்றாக சிங்கப்பூர் கருதப்படுகிறது என்று அக்கழகத்தின் செய்தி அறிக்கை கூறுகிறது. சிங்கப்பூரில் தற்போது இருக் கும் முனையம், எதிர்காலத்தில் துவாஸில் அமையவிருக்கும் முனையம் ஆகியவற்றின் செயல் பாடுகளில் புத்தாக்கம் மற்றும் செலவைக் குறைக்கும் தொழில் நுட்பத் தீர்வுகள் ஆகியவற்றை மேம்படுத்தும் தொடர் நடவடிக்கை களை 'பிஎஸ்ஏ வாழும் ஆய்வுக் கூடம்' மேற்பார்வையிடும். தானியக்க முறையில் செயல் படும் வாகன முறையில் வரும் 2017ஆம் ஆண்டுக்குள் 30 வாக னங்கள் சேர்க்கப்படுவது மற் றொரு முக்கியமான திட்டமாகும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!