குடிநுழைவை விரைவாகக் கடக்கும் திட்டம் தொடக்கம்

சிங்கப்பூர், அமெரிக்க குடிமக்கள் இனி இரு நாடுகளின் பிரதான விமான நிலையங்களில் குடி நுழைவை விரைந்து கடக்க முடி யும். இதற்கு வழி செய்யும் 'அமெரிக்க - சிங்கப்பூர் நம்பகமான பயணித் திட்டம்' எனும் புதிய முறையை நேற்று சிங்கப்பூர் குடி நுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் அறிமுகப்படுத்தியது. இந்த இருநாட்டுத் திட்டம் மூலம் இரு நாட்டு மக்கள் தானியங்கி குடிநுழைவுத் தடங்களைப் பயன்படுத்தும்போது தங்கள் பயண நேரத்தைக் குறைக்கலாம்.

மேலும் இந்தச் சலுகை மூலம் இரு நாடுகள் தங்கள் வர்த்தகம், வியாபாரம், சுற்றுலா இணைப்பு களை மேம்படுத்த முடியும். அமெரிக்காவின் நம்பகமான பயணித் திட்டத்தின் ஒரு பகுதியான உலகளாவிய நுழைவுத் திட் டம், தகுதி பெற்ற விண்ணப்பதாரர் களுக்கு அமெரிக்க விமான நிலையங்களில் விரைவாகக் குடி நுழைவைக் கடக்க உதவும். இந்தத் தகுதியைப் பெற்றுள்ள சிங்கப்பூர் கடப்பிதழ்களை வைத்துள்ளவர்கள் 'ஜிஇபி' எனும் உல களாவிய நுழைவுத் திட்டத்தின் இணையப் பக்கமான www.cbp.gov மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் சேர 100 அமெரிக்க டாலர் பணம் செலுத்த வேண்டும். இந்த உறுப்பியம் ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் அமெரிக்க குடிமக்கள் விரைவாகக் குடிநுழைவைக் கடக்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைக்கும் (இடமிருந்து) அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் இயக்குநர் கில் கெர்லிகவ்ஸ்கி, சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதர் கிர்க் வேகர், உள்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின், குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் தலைவர் கிளேரன்ஸ் இயோ. படம்: பெரித்தா ஹரியான்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!