கேலாங் சிராய் பகுதியில் விபத்தில் சிக்கிய போலிஸ் வாகனம்

கேலாங் சிராய் நோன்புப் பெருநாள் சந்தையை நோக்கி விரைந்த ஒரு காரைத் துரத்திச் சென்ற போக் குவரத்து போலிஸ்கார், முன் சென்ற மற்றொரு காருடன் மோதி யது. நேற்று முன்தினம் இரவு 8.50 மணிக்கு நடந்த அந்தச் சம்ப வத்தை நேரில் பார்த்த ஒருவர், போலிஸ் கார் அதிகமானோர் நின்றுகொண்டிருந்த பேருந்து நிறுத்தத்துக்கு அருகில், கேலாங் ரோடு, எங்கு அமான் ரோடு சந்திப்பில் மற்றொரு காருடன் மோதியது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

போலிஸ் துரத்திச் சென்ற காரின் ஓட்டுநரான 28 வயது ஆடவர் பின்னர் கைது செய்யப் பட்டார் என்று போலிஸ் நேற்று உறுதிப்படுத்தியது. விபத்தில் சம்பந்தப்படாத, போலிஸ் துரத்திச் சென்ற காரின் ஓட்டுநர் அவ்விடத்தை விட்டு தமது காரில் தப்பித்துச் சென்றார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. மோதல் சம்பவம் பற்றி இரவு 8.56 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப் புப் படை தெரிவித்தது. 30 வயதுகளில் இருக்கும் ஆடவர் ஒருவர் சிறு காயங்களுக்காக சாங்கி பொது மருத்துவம னைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் தொடர்பிலான புகைப்படங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

ஒரு பி.எம்.டபிள்யூ வகை காருடன் மோதிய போக்குவரத்து போலிஸ் கார். பி.எம்.டபிள்யூ காரின் பிற்புறம் பலத்த சேதத்துக்கு உள்ளானது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!