‘வெல்கேர்’ மாணவர் பரா­ம­ரிப்பு நிலை­ய தகுதி ரத்து

'வெல்கேர்' மாணவர் பரா­­­ம­­­ரிப்பு நிலை­­­யத்­­­தின் அரசு மாணவர் பரா­­­ம­­­ரிப்பு கட்டண உதவி வழங்­­­கும் நிர்வாகி தகுதியை சமூக குடும்ப மேம்பாட்டு அமைச்சு ரத்து செய்­­­துள்­­­ளது. மாற்று பரா­­­ம­­­ரிப்புச் சேவை­­­களுக்கு ஏற்பாடு செய்ய பெற்றோருக்கு போதிய கால அவ­­­கா­­­சம் அளிக்­­­கும் வகையில் ஆகஸ்ட் 1ஆம் தேதியில் இருந்து சேவை ரத்து நடப்­­­புக்கு வரு­­­கிறது என்று அமைச்சு நேற்று வெளி­­­யிட்ட அறிக்கை தெரி­­­வித்­­­தது. மாணவர் பரா­­­ம­­­ரிப்புச் சேவை நிலை­­­யத் தகுதியை ரத்து செய்வது குறித்து அந்­­­நிலை­­­யத்­­­திற்கு மார்ச் 22ஆம் தேதி அறிக்கை அனுப்­­­பப்­­­பட்­­­ட­­­தாக அமைச்சு குறிப்­­­பிட்­­­டது. அமைச்­­­சின் அண்மைய கணக்­­­குத் தணிக்கை­­­யின்­­­போது பல தடவை­­­கள் மாணவர் பரா­­­ம­­­ரிப்பு கட்டண மானி­­­யங்கள் தவறான முறையில் பெறப்­­­பட்டி ருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து இந்த நட­­­வ­­­டிக்கை எடுக்­­­கப்­­­பட்­­­டுள்­­­ளது.

இந்த விவ­­­கா­­­ரம் வர்த்­­­தக விவ­­­கா­­­ரப் பிரி­­­வி­­­டம் ஒப்­­­படைக்­­­கப்­­­பட்­­டி­ருப்­­­ப­­­தாக அமைச்சு கூறியது. கணக்­­­கில் உள்ள குறை­­­பாடு­­­கள் குறித்து விளக்­­­கம் அளிக்க 'வெல்கே'ருக்கு 14 நாட்கள் கொடுக்­­­கப்­­­பட்­­­டது. மேலும் இது குறித்த செயல்­­­முறையை மேம்படுத்­­­து­­­வதற்­­­கான வழி­­­முறைகளை­­­யும் அமைச்சு பரிந்­­­துரைத்­­தது. அதைத் தொடர்ந்து நிலையம் தெரி­­­வித்த பதிலின் அடிப்­­­படை­­­யில், குறை­­­பாடு­­­களைச் சரியாக விளக்க 'வெல்கேர்' மாணவர் பரா­­­ம­­­ரிப்பு நிலையம் தவறிவிட்­­­ட­­­தாக சமூக குடும்ப மேம்பாட்டு அமைச்சு முடிவு செய்தது.

நிலை­­­யத்­­­தின் வேண்­­­டு­­­கோ­ளின் அடிப்­­­படை­­­யில் கிட்­­­டத்­­­தட்ட மூன்று மாத காலத்­­­துக்கு கால அவ­­­கா­­­சம் கொடுக்கப்பட்ட போதும், செயல்­­­பாடு­­­களை மேம் படுத்­­­து­­­வ­­­து­­­டன், அர­­­சாங்கத்­­­தின் மாணவர் பரா­­­ம­­­ரிப்பு மானி­­­யத்தை முறையாக நிர்­­­வ­­­கித்து பொதுப் பணம் விர­­­ய­­­மா­­­கா­­­மல் இருப்­­­ப­­­தில் தனது கடப்­­­பாட்டை­­­யும் திறனை­­­யும் நிலை­­­யத்­­­தினால் வெளிப் ­­­படுத்த முடி­­­ய­­­வில்லை என்று அமைச்சு தெரி­­­வித்­­­தது. வெல்கேர் நிறு­­­வ­­­னம் தவறான முறையில் பெற்ற மானியத் தொகையை முழுமை­­­யாக மீட்கும் நட­­­வ­­­டிக்கை மேற்­­­கொள்­­­ளப் பட்­­டுள்­­­ளது. அத்­­­து­­­டன் அமைச்சு, வெல்கேர் நிலை­­­யத்­­­தில் மாண­­­வர்­­­களைச் சேர்த்­­­துள்ள பெற்­­­றோ­­­ரு ­­­டன் தொடர்­­­பு­­­கொண்டு, அவர்­­­களுக்கு நிலைமையை விளக்கி, உதவி வரு­­­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!