திறமையில் முன்னணி வகிக்கும் இளம் சிங்கப்பூரர்

எண், எழுத்து அறிவு, பிரச்­சினை­களைத் தீர்க்க மின்­னி­லக்க கரு­வி­களைப் பயன்­படுத்­து­வது போன்ற திறன்களில் இளம் சிங்கப்­பூ­ரர்­கள் உல­க­ள­வில் சிறந்து விளங்­கு­கிறார்­கள். எனினும் மூத்த குடி­மக்­கள் எண், எழுத்து ஆற்­றல்­களில் சரா­ச­ரிக்­கும் குறைவான திறமை­யு­டன் பின்­தங்கி இருக்­கிறார்­கள். 16 வய­துக்­கும் 65 வய­துக்­கும் இடைப்­பட்ட 5,468 சிங்கப்­பூ­ரர்­களி­டம் பொரு­ளி­யல் ஒத்­துழைப்பு, உடன்­பாடு அமைப்­பின் அனைத்­து­லக பெரியோர் திறன் மதிப்­பீட்­டுத் திட்டம் (Pi­a­ac) 2014 முதல் 2015 வரையில் மேற்­கொண்ட ஆய்வில் இந்த விவ­ரங்கள் தெரி­ய ­வந்­துள்­ளன.

34 நாடு­களில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வில் 16 வய­துக்­கும் 34 வய­துக்­கும் இடைப்­பட்ட சிங்கப்­பூ­ரர்­கள் மின்­னி­லக்க சாத­னங் களைப் பயன்­படுத்தி பிரச்­சினை­களைத் தீர்ப்­ப­தில் இரண்டா­வது இடத்­தி­லும்; கணக்கு அறிவில் ஐந்தா­வது இடத்­தி­லும்; எழுத்­த­றி­வில் ஒன்­ப­தா­வது இடத்­தி­லும் வந்த­னர். ஆனால் 45 வய­துக்­கும் 65 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள் பொரு­ளி­யல் ஒத்­துழைப்பு, உடன்­பாடு அமைப்­பின் சராசரி எண், எழுத்து அறிவு நிலைக்­கும் கீழான நிலையில் இருந்த­னர். இரு வயது பிரி­வி­ன­ருக்­கும் இடையே உள்ள இடைவெளி தென்­கொ­ரியா, பின்­லாந்து போன்ற நாடு­களை­விட சிங்கப்­பூ­ரில் அதி­க­மாக உள்ளது. எண், எழுத்து அறி­வாற்­ற­லில் ஜப்பான் முத­லி­டத்தைப் பிடித்­தது.

இந்த இடை­வெ­ளிக்கு மூத்த தலை­முறை­யி­னர் குறைந்த அளவு கல்வி கற்­றி­ருப்­ப­தும், பிற மொழி­களில் படித்த அவர்­கள் இந்த சோதனை­யில் பயன்­படுத்தப்பட்ட மொழிக்கு பழக்­க­மில்­லா­மல் இருப்­ப­தும் கார­ணங்க­ளாக இருக்­க­லாம் என்று அமைப்பு கூறியது. சிங்கப்­பூ­ரில் ஆங்­கி­லத்­தில் ஆய்வு நடத்­தப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!