முக்கிய பங்கு வகிக்கும் வழிபாட்டு இடங்கள்

வீ. பழனிச்சாமி

பல்லாண்டு காலமாக சிங்கப்பூர் கட்டிக்காத்து வரும் இன, சமய ஒற்றுமையை நாம் தொடர்ந்து பலப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். நமது சமய, சமூகத் தலைவர்களுடன் நமது ஆலயங்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டு இடங்கள் ஆகியவையும் நமது சமய பன்முகத் தன்மையையும் சமூக ஒற்றுமை யையும் வலுப்படுத்தும் முக்கிய பங்கை ஆற்றிக் கொண்டிருக்கின்றன என்று கலாசார, சமூக, இளை யர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு பிஜிபி அரங்கில் நடைபெற்ற இந்து அறக் கட்டளை வாரியத்தின்கீழ் இயங் கும் ஆலயங்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமன நிகழ்ச்சி யில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திருவாட்டி ஃபூ, இதர சமயத்தைச் சேர்ந்தவர்கள் இந்து சமயத்தையும் வளமான இந்து கலாசாரத்தைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் அவர்களைத் தங்கள் ஆலய வளாகத்துக்குள் வரவேற்கும் வாரிய கோயில்கள் தலைவர்களைப் பாராட்டினார்.

உறுப்பினர் என்ற முறையில் இன, சமய நன்னம்பிக்கை வட்டங்களில் பங்கேற்பது, இதர சமய தலைவர்களுடன் உறவைப் பலப் படுத்திக் கொள்வது, தைப்பூசம் போன்ற பெரிய விழாக்களில் சிங் கப்பூர் மக்கள் பங்கேற்க ஏற்பாடுகளைச் செய்வது, சிறுவர்களுக்கு இந்து சமயக் கோட்பாடுகள் பற்றி அறிந்துகொள்ள 'புராஜெக்ட் பக்தி' வகுப்புகளை நடத்துவது போன்ற வாரியத்தின் திட்டங்களை அமைச்சர் ஃபூ பாராட்டினார்.

"பதற்றமான உலகச் சூழ்நிலையில் நமது சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவது முன்பைவிட இப் போது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. "சிங்கப்பூரைச் சுற்றி நிலவும் பயங்கரவாத மிரட்டல்கள் உண்மையானவை. "அவை நம்மைப் பாதிக்காத வண்ணம் சமயங்களுக் கிடையேயும் ஒவ்வொரு சமயத்துக்குள்ளேயும் மதிப்புமிக்க ஒற்றுமை உணர்வு நீடிப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்," என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!