தோழியை அவமானப்படுத்திய உள்துறை அமைச்சின் அதிகாரிக்கு ஆறு மாத சிறைத் தண்டனை

தோழியை விடா­மல் துரத்தி அவமானப்படுத்திய குற்­றத்­திற்­காக உள்துறை அமைச்சு அதிகாரி ஒரு­வ­ருக்கு நீதி­மன்றம் நேற்று ஆறு மாதச் சிறைத் தண்டனை விதித்­துத் தீர்ப்­ப­ளித்­தது. ஏட்ரியன் கோ குவான் கியோங் என்ற 38 வயது அதிகாரி கடந்த ஆண்டு இந்தக் குற்­றத்தைப் புரிந்தார். இந்த மாதத்தில் இதுபோன்ற குற்றத்திற்காக தண்டனை பெறும் இரண்டாவது குற்றவாளி ஏட்ரியன் கோ. இதற்கு முன்பு லாய் ‌ஷி ஹெங் என்ற 26 வயது ஆட­வருக்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஓராண்டுச் சிறைத் தண்டனை வழங்கப்­பட்­டது. இது­கு­றித்து அர­சாங்க வழக்­க­றி­ஞர் தியா­கேஷ் சுகு­மா­றன் கூறும்­போது, "தண்டனை பெற்ற கோ திரு­ம­ண­மா­ன­வர். அவ­ருக்கு மூன்று குழ­ந்தை­கள் உள்­ளன. அவ­ரால் தொந்த­ரவு செய்­யப்­பட்ட பெண்­ணுக்கு வயது 25. அந்தப் பெண்­ணு­டன் 2011ஆம் ஆண்­டில் பழக்­க­மானார்.

"அந்த சம­யம் அந்தப் பெண் பல்­கலைக்கழ­கப் படிப்பு முடித்து விடு­முறை­யில் இருந்தார். அவர்­களின் முதல் சந்­திப்­பிற்­குப் பிறகு அவர்­களின் நட்பு தொடர்ந்தது. அந்தப் பெண்­மணி அரசு அலு­வ­ல­கம் ஒன்­றில் பணி­பு­ரியத் தொடங்­ கினார். அப்­போ­தும் அவர்­க­ளது உறவு தொடர்ந்தது. அவர்­கள் இரு­வ­ரும் ஒன்றாக இருக்­கும் போது அந்தப் பெண்­ம­ணியை அவ­ரது அனு­ம­தி­யு­டன் ஆடை­யின்றி கோ புகைப்­ப­டங்கள் எடுத்­துள்ளார். அந்தப் படங்களை எவ்­வகை­யி­லும் வெளி­யிட மாட்­டேன் என்று அந்தப் பெண்­ணுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­தார். இந்­நிலை­யில் இரு­வ­ருக்­கு­மிடை­யே­யான உற­வில் விரி­சல் நேரிட்­டது.

"அந்தப் பெண்ணுக்­காக அதி­க­மா­கப் பணம் செல­வ­ழிப்­ப­தா­க­வும் ஆனால் அந்தப் பெண்­ணுக்கோ வேறு சில ஆட­வர்­களு­டன் நெருங்­கிய தொடர்பு உள்­ள­தா­க­வும் உணர்ந்தார். இதனால் இரு­வ­ருக்­கும் இடையே அடிக்­கடி வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. "இந்நிலையில் அந்தப் பெண்ணுடைய கைத்தொலைபேசி வாயிலாக அவரது அந்தரங்கப் படங்களை 'வாட்ஸ்அப் குரூப்'பில் அனுப்பிவிட்டார் கோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!