சிங்கப்பூரில் முதல்முறையாக ‘சைபா’ விருதுகள்

வில்சன் சைலஸ்

ஐந்து ஆண்டுகளில் முதல் முறை யாக தென் இந்திய வர்த்தகர் களுக்குச் சிறப்பு விருதுகள் (சைபா) வழங்கி சிறப்பித்தது 'சைமா' எனும் தென்னிந்திய அனைத்துலக திரைப்பட விருது கள் வழங்கும் குழு. சிறந்து விளங்கும் தென் இந்திய வர்த்தகர்களை கௌர விக்கவும் புதிய தொழிலதிபர் களை ஊக்கமூட்டவும் சைமா அமைப்பு 'எர்ன்ஸ்ட் ஆண்ட் யங் நிறுவனத்துடன் இணைந்து இந்த விருது நிகழ்ச்சியை சிங்கப்பூரின் ஃபேர்மொண்ட் ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு நடத்தியது. உள்கட்டமைப்பு சக்தியும், உணவு மற்றும் வேளான்மை, ஊட கம், மருத்துவப் பொருட்கள், சில் லறை வர்த்தகம், போக்குவரத்துச் சேவைகள், வாகன சேவைகள் எனக் கிட்டத்தட்ட பத்து பிரிவு களின்கீழ் வர்த்தகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தெலுங்கானாவின் தகவல் தொழில்நுட்பம், நகராட்சி நிர் வாகம் மற்றும் நகர் மேம்பாடு ஆகியவற்றுக்கான அமைச்சர் கேடி ராமாராவ், இலங்கையின் கால்நடை மற்றும் நகர் சமூக மேம்பாட்டுக்கான அமைச்சர் ஆறு முகம் தொண்டமான் ஆகிய முக் கிய பிரமுகர்கள் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தனர். உள்ளூர் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 200 தொழிலதிபர்கள் கலந்துகொண்ட இந்த விருது நிகழ்ச்சியில் சிங்கப்பூரில் உள்ள 'கூகல்' நிறுவனத்துக்கான ஆசிய வட்டார தலைவர் திரு அஜய் வித்யசாகார், அமைச்சர் கேடி ராமாராவ் போன்ற முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற கலந்து ரையாடலும் இடம்பெற்றது.

'சைமா' விருது நிகழ்ச்சியில் ஓர் அங்கமாக நேற்று முன்தினம் நடைபெற்ற தென்னிந்திய வர்த்தக சாதனையாளர்கள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் அங்கத்தில் தெலுங்கானா மாநில அமைச்சர் கேடி ராமாராவ் (நடுவில்), சிங்கப்பூரில் உள்ள கூகல் நிறுவனத்துக்கான ஆசிய வட்டார தலைவர் திரு அஜய் வித்யாசாகர் (இடது), மற்றொரு முக்கிய பிரமுகர் திரு ஸ்ரீதர் ஆகியோர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வர்த்தக வாய்ப்புகள் பற்றி கலந்துரையாடினர். படம்: திமத்தி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!