2017 மத்தியில் மின்சார கார் பகிர்வுத் திட்டம்

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து மின்சார கார் பகிர்வுத் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்றும் வரும் 2020ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீட மைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டை களும் இத்திட்டத்தின் மூலம் பய னடையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்பில் 'ப்ளூ எஸ்ஜி' எனப்படும் பிரஞ்சு 'போலோர்' நிறுவனக் குழுமத்தின் துணை நிறுவனம், நிலப் போக்கு வரத்து ஆணையம், பொருளியல் வளர்ச்சிக் கழகம் ஆகியவை நேற்று அதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

'ப்ளூ எஸ்ஜி' என்று பெயரிடப் பட்டிருக்கும் இத்திட்டத்தில் படிப் படியாக 1,000 மின்சார கார்கள் ஈடுபடுத்தப்படும். அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் அங் மோ கியோ, ஜூரோங் ஈஸ்ட், பொங்கோல் போன்ற நகரங் களில் 125 மின்சார கார்களும் 250 மின்னேற்றிச் சாதனங்களும் அறிமுகப்படுத்தப்படும். இந்த உடன்பாட்டின் மூலம், 'ப்ளூ எஸ்ஜி' நிறுவனம் இத்திட்டத்தை அடுத்த பத்து ஆண்டுக ளுக்கு நடத்தும் என்றும் தீவு முழு வதும் மின்சார கார்களுக்கான 2,000 மின்னேற்றிச் சாதனங்களைச் செயல்படுத்தும். இதில் 20% வரையிலான மின் னேற்றிச் சாதனங்களைப் பொதுமக் கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையமும் பொருளியல் வளர்ச் சிக் கழகமும் கூட்டாக அறிவித்தன.

நேற்று கையெழுத்துச் சடங்கில் பேசிய போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான், "சிங்கப்பூரில் எதிர்காலத்தில் அதிக எண்ணிக் கையிலான மின்சார கார்கள் பயன்படுத்தும் முறைக்கு இது படிக்கல்," என்றார். "இத்திட்டம் நமது குறைந்த கார் மற்றும் பசுமைக் கார் திட்டங் களைப் பிரபலப்படுத்தும். இதற் காக வீவக பேட்டைகள், மத்திய வர்த்தக வட்டாரம், முக்கியமான தொழிற்பேட்டைகள் ஆகியவற்றில் 2,000 மின்சார கார்கள் நிறுத்தி வைப்பதற்கான இடங்கள் ஒதுக் கப்படும். "மின்சார கார்கள் சாதாரணக் கார்களைக் காட்டிலும் குறைந்த அளவில் புகையை வெளியாக்கும் என்பதால் அது சுற்றுப்புறத்துக்கு நன்மை விளைவிப்பதாக இருக் கும்," என்றும் விளக்கினார். இந்த மின்சார கார் பகிர்வு திட்டத்தில் கார்களைப் பயன்படுத் துவோர் ஓர் இடத்தில் காரை பெற்றுக் கொண்டு மற்றோர் இடத்தில் விட்டுச் செல்ல வசதி இருக்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!