‘ஃபேர்பிரைஸ் ஷாப்’ புதுவகை கடைகள்

என்டியுசி ஃபேர்பிரைஸ் நிறுவனம், சிக்கனமான வாடிக்கையாளர் களை மனதில்கொண்டு புதிய வகை கடைகளைத் திறக்கிறது. 'ஃபேர்பிரைஸ் ஷாப்' என்று குறிப்பிடப்படும் இந்தச் சிறு கடை கள், குறைந்த வருமானக் குடும் பங்கள் அதிகமாக வாழும் வட் டாரங்களில் அமையும். இந்தக் கடைகளில் குறைந்த விலைகளில் பொருட்களை மக்கள் வாங்கலாம். எல்லா பொருட்களும் இங்கு கிடைக்காது என்றாலும் ஃபேர்பிரைஸ் கடைக்கே உரிய புதிய 'வேல்யூ ஃபிரஷ்' (Value Fresh) ஏற்பாட்டில் அடங்கும் 34 வகை காய்கறிகளையும் 5 முதல் 10% வரை விலை மலிவாக இந்தக் கடையில் வாங்க முடியும்.

யூனோஸ், சர்க்கியூட் ரோடு ஆகியவற்றில் உள்ள முதிர்ச்சி யடைந்த குடியிருப்புப் பேட்டை களில் செயல்பட்ட தனது இரண்டு பேரங்காடிகளை 'ஃபேர்பிரைஸ் ஷாப்' கடைகளாக இந்த நிறுவனம் மாற்றியிருக்கிறது. மூவறை, ஈரறை வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் இந்தப் பகுதிகளில் அதிகம். இந்த ஆண் டின் முடிவுவாக்கில் ஹெண்டர்சன், பூன் லே, அங் மோ கியோ, ஜுரோங் ஈஸ்ட் போன்ற இடங் களில் மேலும் நான்கு கடைகளைத் திறக்க ஃபேர்பிரைஸ் திட்டமிடுகிறது. "ஃபேர்பிரைஸ் ஷாப் கடைகள் பெரிய பேரங்காடிகளைப்போல இருக்காது. குறிப்பாக சிக்கனமான, கணக்குப்போட்டுச் செல வழிக்கும் குடும்பங்களை இது கருத்தில் கொள்ளும்," என்று ஃபேர்பிரைஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சியா கியான் பெங் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!