2023ல் 50 இடங்களில் முதியோர் சாலை கடப்புகள்

முதியோர் சாலை கடப்புச் செயல் திட்டத்தை 2023ஆம் ஆண்டில் 50 இடங்களில் அமல்படுத்தப்போவ தாக நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்திருக்கிறது. அந்தச் செயல்திட்டம் தொடக்கமாக 35 வட்டாரங்களில் செயல்படுத்தப் படுகிறது. அதிக எண்ணிக்கையில் முதியோர் வசிக்கின்ற, முதியோர் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகள் அதிகம் நிகழ்கின்ற குடியிருப்புப் பகுதிகளில் சிறப்பாகக் குறிப்பிடப் படும் பகுதியே முதியோர் சாலை கடப்பிடம் என்று அழைக்கப்படு கிறது.

மரினா கிரசெண்ட், மரினா டெரஸ் வட்டாரத்தில் இத்தகைய ஒரு கடப்பிடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந் தது. அதில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. முதியோர் சாலை கடப்பிடச் செயல்திட்டம் பற்றி 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த அமைச்சு வரவு, செலவுத் திட்ட விவாதத்தின்போது முதன் முதலாக அறிவிக்கப்பட்டது. அது முதல் நேற்றுடன் எட்டு முதியோர் சாலைக் கடப்பிடங்கள் செயல்படுகின்றன. இத்தகைய இடங்களில் இருக் கும் சாலைச் சந்திப்புகளில் முதி யோரும் வாகன ஓட்டிகளும் விழிப் புடன் நடந்துகொள்ளவேண்டும் என்ற குறிக்கோளுடன் ஒவ்வொரு இடத்தின் நிலவரத்தைப் பொறுத்து முதியோருக்குப் பாதுகாப்பு ஏற்பாடு கள் இடம்பெறுகின்றன.

நடையர்கள் சாலையைக் கடக் கும் சாத்தியம் அதிகம் உள்ள இடங்களில் தடையில்லாத நடை யர் கடப்பிடங்களை அமைப்பது மற்ற அம்சங்களில் அடங்கும். சாலையைக் கடக்கும்போது நடுவில் நின்று செல்லவும் சக்கர நாற்காலிகளில் வரும் முதியோ ருக்கு ஏறுமுக மேடை வழிகளும் இவற்றில் அடங்கும். எட்டாவது முதியோர் கடப்பிடத்தை, ஓய்வு பெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் அதிகாரபூர் வமாக தொடங்கிவைத்தார். "நடையர்கள் இளையராக, முதியோராக எப்படி இருந்தாலும் அதேபோல் வாகன ஓட்டிகளும் இளையராக, முதியோராக எப்படி இருந்தாலும் ஒருவர் மற்றொரு வரை எண்ணிப்பார்த்து நடந்து கொள்ள வேண்டும்.

"குடியிருப்புப் பேட்டை முதியோ ருக்குப் பொருத்தமானதாக, வசதியானதாக இருப்பதை உறுதிப் படுத்த அரசாங்கம் அனைத்தை யும் செய்யும் என்றாலும் இதில் நமது சமூக நடத்தை மிகவும் முக்கியம்," என்றார் திரு கோ. பிடோக் நார்த், கிளமெண்டி, காமன்வெல்த், தெலுக் பிளாங்கா, தோ பாயோ, உட்லண்ட்ஸ் ஆகிய வற்றில் மேலும் ஆறு முதியோர் சாலை கடப்பிடங்களை அடுத்த ஆண்டுக்குள் அமைத்து முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

மரின் பரேட் வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள முதியோர் சாலை கடக்கும் இடங்களில் ஒன்றில் முதியவர் ஒருவர் சாலையைக் கடப்பதைப் பார்வையிடுகிறார் ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் (நடுவில்). படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!