புதிய டென்னிஸ் கழகம்

டென்னிஸை அனைத்து வயதினரும் விளையாட ஊக்குவிக்கும் நோக்கில் 'ஆக்டிவ் எஸ்ஜி' புதிய டென்னிஸ் கழகம் நேற்று அறிமுகமானது. ஆண்டு இறுதிக்குள் 4,000 சிறுவர்களை சேர்ப்பது கழகத்தின் இலக்கு. 'ஆக்டிவ் எஸ்ஜி'யின் கீழ் செயல்படும் நான்காவது விளையாட்டுக் கழகம் இது. ஏற்கெனவே, காற்பந்து, கூடைப்பந்து, திடல்தட கழகங்கள் அறிமுகமாகியுள்ளன.

"முடிந்தவரையில் பலருக்கு டென்னிஸை அறிமுகம் செய்வது இந்தக் கழகத்தின் நோக்கம். டென்னிஸ் விளையாட சிறுவர்களுக்கு வாய்ப்பளித்து இவ்விளையாட்டில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்துவதும் அதில் ஒன்று," என்று கூறினார் கலாசார, சமூக இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ. தீவு முழுவதும் ஐந்து வட்டார கழகங்கள் அமைக்கப்பட வுள்ளன. அதில் இரண்டு காலாங் டென்னிஸ் சென்டரிலும் இயோ சூ காங்கிலும் இந்தாண்டு இறுதிக்குள் செயல்படத் துவங்கும். மூன்றாவது நிலையம் ஃபேரர் பார்க் டென்னிஸ் நிலையத்தில் அடுத்த ஆண்டு அமையும். மேல் விவரங்களுக்கு www.myactivesg.com/academy/tennis என்ற இணையப் பக்கத்தைப் பார்க்கவும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!