‘சிறப்பு உதவி தேவைப்படும் பிள்ளைகளைக் காக்க புதிய சட்டங்கள் தேவை’

சிறப்பு உதவிகள் தேவைப்படும் பிள்ளைகளின் பெற்றோரில் பெரும் பாலானவர்கள் தங்கள் பிள்ளை களின் உரிமைகளைக் காக்க புதிய சட்டங்கள் தேவை என்று விரும்புகிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு இப் பொழுது இருப்பதைவிட இன்னும் சிறந்த பாலர்பள்ளிக் கல்வி தேவை என்றும் அவர்கள் கருதுகிறார்கள். லியென் அறநிறுவனம் என்ற சிங்கப்பூரின் கொடைவள்ளல் அமைப்பு ஆணை பிறப்பித்து நடத் தப்பட்ட ஓர் ஆய்வு இந்த விவ ரங்களைத் தெரிவிக்கிறது.

அந்த ஆய்வில் 835 பெற்றோர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் ஒன்பதுக்கும் குறைந்த வயதுள்ள சிறப்பு உதவி தேவைப்படும் பிள் ளைகளின் பெற்றோர். ஆய்வில் கலந்துகொண்டவர் களில் ஏறக்குறைய முக்கால்வாசி பேர் (72 விழுக்காட்டினர்) புதிய சட்டங்கள் தேவை என்று கருது கிறார்கள்.

பாலர்பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களைப் பார்க்கையில் தங்கள் பிள்ளை களுக்குப் பாலர்பள்ளிகளில் போதிய ஆதரவு இருக்கிறது என்று கருதுவோர் பாதிப்பேர் கூட இல்லை. ஆசிரியர்களும் பாடத்திட்டமும் வசதிகளும் போதிய அளவுக்கு இல்லை என்று பாதிப் பேருக்கும் அதிகமான பெற்றோர் கருது கிறார்கள். அடிப்படை வசதிகளும் சுற்றுச் சூழலும் பலவீனமாக இருப்பதாக சிறப்பு உதவி தேவைப்படும் பிள்ளைகளின் பெற்றோர் கருது கிறார்கள் என்று ஆய்வு தெரிவிக் கிறது.

வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் விளையாட்டுப் பொருள் நூலகத்தில் கதை சொல்லும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறப்பு தேவையுடைய பிள்ளைகள் கூறப்படும் கதையை ஆர்வத்துடன் கேட்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!