எம்ஆர்டி பயணம் குறித்து பயணிகள் மனநிறைவு

தெற்கு-வடக்கு, கிழக்கு- மேற்கு பாதைகளில் தனது ரயில் சேவை களில் பயணம் செய்வோரின் அனு பவங்களைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப தனது சேவைகளை மேம்படுத்த எண்ணும் எஸ்எம் ஆர்டி நிறுவனத்தின் முயற்சிக்கு ஆக்கபூர்வமான பதில்கள் கிடைத்துள்ளன. அதன் சில நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பயண அனுப வக் கருத்தறியும் சாதனங்களில் பயணிகள் நல்ல கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர் என்று நிறு வனம் நேற்று தெரிவித்தது. நாள்தோறும் தனது ரயில் கட்டமைப்பில் பயணம் செய்யும் சுமார் மூன்று மில்லியன் பயணிக ளுடன் தனது தொடர்பு முறையை மேம்படுத்தும் நோக்கில் எஸ்எம் ஆர்டி நிறுவனம் இரண்டு தொடர்பு முறை இயக்கங்களை நடத்தியது.

தனது சேவையின் நம்பகத்தன் மையை மேம்படுத்தும் முயற்சி பற்றி பயணிகளுக்குத் தெரிவிப்பது டன் எந்த அம்சத்தில் அவர்கள் குறை, நிறைகளைக் காண்கிறார் கள் எனும் தகவலைச் சேகரிக்கும் முயற்சியிலும் நிறுவனம் ஈடுபட் டது. முதலாவது இருவழித் தொடர்பு இயக்கத்தில் இவ்வாண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் தனது எட்டு நிலையங்களிலும் நான்கு பேருந்து சந்திப்பு நிலையங்களிலும் பயண அனுபவக் கருத்தறியும் சாதனங்களை எஸ்எம்ஆர்டி வைத் தது.

இதன் மூலம் பயணிகள் தங் கள் பயண அனுபவத்தை அந்தச் சாதனத்தில் பதிவு செய்தனர். இரு மாதம் நீடிக்கும் இந்தச் சோதனை முறையின் முதல் மாதத் திலேயே பயணிகள் தெரிவித்த பயண அனுபவக் கருத்து சாதகமாக இருந்தது என்று குறிப்பிட்ட நிறுவனம் இதுவரை 69,300 பய ணிகள் தங்கள் பயண அனுபவக் கருத்தைப் பதிவு செய்துள்ளனர் என்றும் கூறியது.

எஸ்எம்ஆர்டி ரயில்களில் தாங்கள் மேற்கொண்ட பயண அனுபவம் குறித்து பயணிகள் எம்ஆர்டி நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பயண அனுபவக் கருத்தறியும் சாதனத்தில் பதியலாம். படம்: எஸ்எம்ஆர்டி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!