பணிப்பெண்ணின் மகனுக்காக நிதி திரட்ட 500 கி.மீ ஓடும் வழக்கறிஞர்

பிரிட்டினை சேர்ந்த வழக்கறிஞர் இசபெல்லா கிளைஸி, தனது பிலிப்பினோ நாட்டுப் பணிப்பெண்ணின் புற்றுநோய் பாதிக்கப்பட்ட மகனுக்காக மொட்டை யடித்துக் கொண்டு $63,000 நிதி திரட்டினார். பணிப்பெண்ணின் 11 வயது மகனான டேவ் கபா=வுக்கு அவரது காலில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட எலும்பை மாற்றுவதற்காக இரண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை ஒன்றில் அவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. அதைச் சரிசெய்ய அவருக்கு 'ஐவி ஆண்டிபயோட்டிக்ஸ்' கொடுக்கப்பட வேண்டும். அதற்கு நாள் ஒன்றுக்கு $200 வீதம் 6 வாரங்களுக்கு செலவழிக்க வேண்டும்.

இந்தக் கூடுதல் செலவை சரிக்கட்டும் வகையில் குமாரி கிளைஸி, மீண்டும் ஒரு தீரச் செயலில் ஈடுபடப்போகிறார். நாள்தோறும் வீட்டிலிருந்து வேலைக்கு 17 கி.மீட்டர் தூரம் ஓடவிருக்கிறார். மாதத்திற்கு 500 கீ.மீட்டர் தூரம் ஓடும் வகையில் வார இறுதியிலும் ஓடவிருக்கிறார். இப்போது பிலிப்பீன்ஸில் இருக்கும் டேவுக்காக $12,000 திரட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளார். அவரது ஓட்டத்தைப் பதிவு செய்வதற்காக www.facebook.com/runfordave/ ஃபேஸ்புக் முகவரி ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!