காதலரின் முன்னாள் காதலியின் அந்தரங்கப் படங்களை இணையத்தில் வெளியிட்ட பெண்

முன்னாள் காத­லி­யின் அந்த­ரங்கப் படங்களை மடிக்­க­ணி­னி­யில் காத­லர் வைத்­தி­ருப்­பதைக் கண்டு ஆத்­தி­ரம் அடைந்த இந்­நாள் காதலி, காத­ல­னின் முன்னாள் காத­லி­யின் அந்த அந்த­ரங்கப் படங்களை இணை­யத்­தில் உலவ விட்டு தனது ஆத்­தி­ரத்தைத் தீர்த்­துக் கொண்டார். பகு­தி­நேர எழுத்­த­ரா­கப் பணி­யாற்­றும் இயோ மின் பிங் என்றழைக்­கப்­படும் இயோ ஹுய் கி என்­ப­வர் தனது காத­ல­ரின் முன்னாள் காத­லி­யின் அந்த­ரங்கப் படங்களை இணை­யத்­தில் ஏற்­றிய குற்­றத்­திற்­காக அவ­ருக்கு ஒரு மாதச் சிறைத் தண்டனை விதித்து நீதி­மன்றம் நேற்று தீர்ப்­ப­ளித்­தது. காத­ல­ரின் கணி­னி­யில் இருந்த படங்களை 'தம்ப்­டிரைவ்' வாயி­லாக எடுத்து அவற்றை படங்கள் பதிவேற்றும் இணை­யத் தளம் ஒன்­றில் பதி­வேற்­றம் செய்­தார். அந்தப் படங்கள் சேமிக்­கப்­பட்ட ஃபோல்­ட­ருக்கு "நாட்­டி­னெஸ்" என்று பெய­ரிட்­டார்.

மேலாடை இல்­லாத வேறு ஒரு­வ­ரின் படங்களு­டன் இந்தப் பெண்­ணின் முகத்தை இணைத்து, தனது காத­ல­ரின் முன்னாள் காத­லி­யின் உண்மைப் பெயரையே இட்டு இணை­யத்­தில் பதி­வேற்­றம் செய்­துள்­ளார். "டேட்­டிங்" இணை­யத்­த­ளம் உள்­ளிட்ட தளங்களில் இந்தப் படங்களைப் பதி­வேற்­றம் செய்­துள்­ளார். அவர் •மீது சுமத்­தப்­பட்­டுள்ள 3 குற்­றங்களில் ஒன்றான யீ‌ஷுன் ஸ்திரீட் 61ல் உள்ள அவ­ரது வீட்­டில் இருந்து படங்களைப் பதி ­வேற்­றம் செய்­த­ததை இயோ ஒத்­துக்கொண்டார். அவ­ருக்கு $10,000 பிணை வழங்கப்­ பட்­டுள்­ளது.

இது­பற்­றி ­கூ­றிய நீதி­பதி லீ போ சூ, "இன்­னொரு அப்­பா­விப் பெண்­ணின் வாழ்க்கையைச் சீர­ழித்­துள்­ளார்," இவ­ருடைய இந்தச் செயல் முற்­றி­லும் வெறுக்­கத்­தக்­கது," என்றார். இவர் இன்­னொரு பெண்­ணுக்கு இழைத்த தீங்கு கணக்­கில் எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட ­வில்லை. அந்தப் பெண்­ணின் உண்மைப் பெய­ரில் இணை­யத்­தில் உலா வரும் அந்தப் படங்க­ளால் வாழ்க்கை முழு­தும் அவர் பாதிக்­கப்­படு­வார். "உங்களுக்கு அந்தப் அப்­பா­விப் பெண் எந்த­வி­தத்­தி­லும் கெடு­தல் செய்­ய­வில்லை. அவ­ருக்கு ஏன் நீங்கள் இது­போன்ற தண்டனையைக் கொடுக்க வேண்­டும்?" என்று இயோ­வி­டம் நீதி­பதி கேட்­டார். அதற்­கான பதிலை இயோ சொல்­ல­வில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!