வங்கியில் கொள்ளை: தப்பிய சந்தேக நபருக்கு வலைவீச்சு

கொள்ளைச் சம்பவம் நிகழ்ந் ததையொட்டி சிங்கப்பூரின் ஹாலந்து வில்லேஜ் பகுதியில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி நேற்று மூடப்பட்டது. இந்த வங்கியிலிருந்து கிட்டத்தட்ட 30,000 வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முற்பகல் 11.25 மணிவாக்கில் நடைபெற்ற அந்தக் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலிஸ் தெரிவித்தது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று தெரிய வரு கிறது. அந்த வங்கியைச் சுற்றிலும் போலிசார் தடுப்புகளை அமைத் திருந்ததை செய்தியாளர்கள் கண்டனர்.

அந்த வங்கிக்கு அருகில் உள்ள சிட்டிபேங் வங்கிக்கு வந் திருந்த வாடிக்கையாளர் ஒருவர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித் தாளிடம் தெரிவிக்கையில், பிற் பகல் நேரத்தில் கிட்டத்தட்ட பத்து போலிஸ் கார்களும் இரு போலிஸ் வேன்களும் அப்பகு தியைச் சூழ்ந்திருந்ததாகக் கூறி னார். வெள்ளைக்காரர் ஒருவரின் படத்தைக் காட்டி படத்தில் உள்ளவரைப் போன்ற எவரையும் பார்த்தனரா என்று பொதுமக்க ளிடம் அதிகாரிகள் விசாரித்துக் கொண்டு இருந்ததைக் காண முடிந்ததாக குடியிருப்பாளர் ஒருவர் கூறினார். போலிசார் குண்டு துளைக்க இயலாத கவசம் அணிந்திருந்த தாகவும் பெயர் குறிப்பிட விரும் பாத அந்த வாடிக்கையாளர் தெரிவித்தார். போலிஸ் விசாரணைக்காக வங்கி தற்காலிகமாக மூடப் பட்டுள்ளதாகவும் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் பத்திர மாக இருந்ததாகவும் ஸ்டாண் டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் பேச்சாளர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!