ஹலிமா: நல்ல சமூகத்தின் வளர்ச்சிக்கு நமது பங்களிப்பு முக்கியமான ஒன்று

சிங்கப்பூரின் முதல் பெண் நாடாளுமன்ற நாயகரான திருவாட்டி ஹலிமா யாக்கோப்பிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம். சிங்கப்பூருக்கும் அதன் சமூ கத்திற்குமான அவரது பங்க ளிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு இந்த கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் முன் னாள் மாணவியான 61 வயது ஹலிமா நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் சட்டத்துறைக்கான கௌரவ முனைவர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இதன் மூலம், இதற்கு முன்னர் கௌரவ முனைவர் பட்டம் பெற்ற முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ, ஓய்வு பெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், முன்னாள் தலைமை நீதிபதி யோங் பங் ஹாவ், சான் செக் கியோங் ஆகியோர் அடங்கிய பட்டியலில் ஹலிமாவும் இணைந்து உள்ளார்.

கடந்த 2001ஆம் ஆண்டு ஜூரோங் குழுத் தொகுதி நாடா ளுமன்ற உறுப்பினராக அரசியலில் அடியெடுத்து வைத்த ஹலிமா இந்த அங்கீகாரம் தனக்கு மிகப் பெரிய ஊக்கமளிப்பதாகக் கூறி னார். மேலும், ஊழியர்கள் நலன், பெண்கள் பிரச்சினை, குடும்ப, மூப்பு தொடர்பானவைகளுக்கு நீண்டகாலமாக பெரும் பங்க ளித்து வரும் ஹலிமா அவற்றில் மேலும் அதிக பங்காற்ற விரும்பு வதாகக் தெரிவித்தார். தொடக்க காலத்தில் தான் எதிர்கொண்ட துன்பங்கள் தனக்கு தூண்டுதலாகவும் ஊக்க மளிப்பதாகவும் இருந்ததாக கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில் ஹலிமா தெரிவித்ததாக 'ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி தெரி விக்கிறது. தனது பங்களிப்பிற்கான இந்த அங்கீகாரத்திற்கு நன்றி தெரி வித்த அவர், "புதிய பட்டதாரிகள் தங்களது சொந்த வாழ்க்கைத் தொழிலில் மட்டும் கவனம் செலுத்தாமல், சமூகத்திற்கு எப்படி பங்களிக் கலாம் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

தனக்கு முன்னால் சமூகத் திற்கு பங்களித்தவர்களின் மூல மாகவும் கல்வி முறை மூலமாகவும் தான் பலனடைந்ததாக அவர் கூறினார். "நல்ல சமூகத்தின் வளர்ச்சிக்கு நமது பங்களிப்பு முக்கியமான ஒன்று," என்றும் அவர் சொன்னார். இதற்கிடையே எதிர்கால வெற் றிக்கு வாழ்நாள் கற்றல் தேவை யான ஒன்று என்று வலியுறுத்தினார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழ கத்தின் தலைவர் பேராசியர் டான் சோர் சுவான். "தொழில்நுட்பம், உலக மய மாக்கல் போன்ற காரணங்களால் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். இதனால், திறன்களும் அறிவாற்றலும் வேக மாக உபயோகமற்று போய்விட லாம். எனவே, எதிர்கால வெற் றிக்கு வாழ்நாள் கற்றல், திறன் களை மேம்படுத்துதல் என்பது கண்டிப்பாகத் தேவைப்படும் ஒன் றாக உள்ளது," என்று அவர் கூறினார். நேற்று தொடங்கி வரும் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப் பட்டமளிப்பு விழாவில் 10,395 பேர் பட்டம் பெறவுள்ளனர்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வேந்தரான அதிபர் டோனி டான் கெங் யாமிடம் இருந்து கௌரவ முனைவர் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் நாடாளுமன்ற நாயகர் திருவாட்டி ஹலிமா யாக்கோப். படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!