நோய் பரவலைக் கையாளும் முறை வலுப்படுத்தப்படும்

சிங்கப்பூரில் நோய்ப்பரவல்கள் கையாளப்படும் முறையை மறு ஆய்வு செய்த பணிக்குழு அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. சென்ற ஆண்டின் கல்லீரல் அழற்சி 'சி' நோய்ப்பரவலைத் தொடர்ந்து பணிக்குழு அமைக்கப் பட்டது. பணிக்குழுவின் அறிக்கையில் 15 மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட் டன. நோய்ப்பரவல் பற்றி தெரியப் படுத்தும் நடைமுறையை எளிமைப் படுத்தவும், பல்வேறு அமைப்பு களுக்கு இடையிலான தகவல் பரி மாற்றத்திற்கு மேம்பட்ட வழிமுறை களை உருவாக்கவும், தெளிவாகத் தீர்மானம் எடுக்கும் நடைமுறையை நிலைநாட்டவும், நோய்ப்பரவலைச் சமாளிக்கும் ஆற்றலை வலுப்படுத் தவும் பரிந்துரைகள் செய்யப்பட்டன.

பணிக்குழுவின் அறிக்கை சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்கிடம் தாக்கல் செய்யப்பட்ட தாகச் சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித் தது. சென்ற ஆண்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் ஏற் பட்ட கல்லீரல் அழற்சி 'சி' நோய்ப் பரவலின்போது, ஜனவரி மாதத்திற் கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 25 சிறுநீரக நோயா ளிகளுக்கு நோய் பரவியது. அவர் களில் எட்டுப் பேர் மரணமடைந்த னர். நோய்ப்பரவலை விசாரணை செய்த சுயேச்சை பரிசீலனைக் குழு, மோசமான நோய்த்தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகளும், தாமதமடைந்த செயல்பாட்டு நடவ டிக்கைகளும் நோய்ப்பரவலுக்குக் காரணம் என டிசம்பர் மாதம் அறி வித்தது. இதனைத் தொடர்ந்து, நோய்ப் பரவலை அடையாளம் கண்டு, செயல்பாட்டு நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ளும் நடைமுறைகளை வலுப்படுத்த, சுகாதார துணை அமைச்சர் சீ ஹொங் டாட்டின் தலைமையில் பணிக்குழு அமைக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!