மூத்த குடிமக்களைத் தேடிச் செல்லும் தொண்டூழியர்கள்

சிங்கப்பூரின் முன்னோடித் தலைமுறையினருக்குக் கிட்டும் பலன்கள் குறித்து அவர்களிடம் விளக்கிச் சொல்வதற்காக இரு ஆண்டுகளுக்குமுன் ஏற்படுத் தப்பட்ட தொண்டூழியர் திட்டம் இப்போது எல்லா மூத்த குடிமக் களையும் சென்றடையும் விதத் தில் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதன்மூலம் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிங் கப்பூரர்கள் அனைவரும் தங்க ளுக்குப் பயன்தரக்கூடிய பல் வேறு அரசாங்கத் திட்டங்களை அறிந்துகொள்ள இயலும்.

முன்னோடித் தலைமுறைத் திட்டத்தில் இடம்பெறாத, 65 மற்றும் அதற்கு மேல் வயதுடைய 90,000 மூத்த குடிமக்களை வீடு வீடாகச் சென்று பார்த்து அவர்களிடம் மெடி‌ஷீல்ட் லைஃப், 'சாஸ்' எனும் சமூக சுகாதார உதவித் திட்டம், ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு போன்ற அரசின் திட்டங்கள் பற்றி முன்னோடித் தலைமுறைத் தூதுவர்கள் விளக்குவர். இதனை நேற்று அறிவித்த பிரதமர் லீ சியன் லூங், "மூத்த குடிமக்களைச் சமூக நடவடிக் கைகளில் ஈடுபடுத்தி அவர்கள் ஆரோக்கியமாகவும் துடிப்புடனும் வாழ தொண்டூழியர்கள் உதவு கின்றனர்," என்று புகழ்ந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!