பொது இடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் போலிஸ் கேமராக்கள்

பத்­தா­யி­ரம் வீடமைப்பு வளர்ச்­சிக் கழக புளோக்­கு­கள், பலமாடி கார் நிறுத்­தும் இடங்கள் ஆகி­ய­வற்­றில் போலிஸ் கண்­கா­ணிப்பு கேம­ராக்­களைப் பொருத்­தும் 'போல்கேம் 1.0' திட்­டத்­தின் கீழ் மொத்தம் 62,000 கேம­ராக்­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. இந்தத் திட்டம் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்­தில் தொடங்கப்­பட்­டது. குற்­றங்கள் தொடர்­பான விசா­ரணை­களுக்கு இந்த கேம­ராக்­களி­லி­ருந்து பெறப்­படும் படங்கள் உதவி­க­ர­மாக இருக்­கின்றன. இவ்­வாண்டு மே மாதம் வரை­யி­லான கால­கட்­டத்­தில் பெறப்­பட்ட 2,300 அத்­தகைய காணொ­ளி­கள் 1,100 வழக்­கு­களின் விசா­ரணை­யில் உதவி­ யுள்­ளன. தேவைக்­கேற்ப கட்­டப்­படும் பிடிஓ வீடு­களி­லும் கார் நிறுத்­து­மி­டங்களி­லும் கேம­ராக்­கள் பொருத்­தப்­படும் என போலிஸ் அறிக்கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

'போல்கேம் 2.0' எனும் திட்­டத்­தின் அடிப்­படை­யில் நகர மையங்களில் உள்ள பொது இடங்கள், அக்­கம்பக்க நிலை­யங்கள், உண­வுக்­கடைத்­தொ­கு­தி­கள், போக்­கு­வ­ரத்து வச­தி­களுக்கு இட்­டுச்­செல்­லும் இணைப்­புப் பாதைகள் ஆகி­ய­வற்­றி­லும் கண்­கா­ணிப்­பு கேம­ராக்­கள் பொருத்­தப்­ப­ட­வுள்­ளன. இத்­திட்­டத்­தின்கீழ் ஏற்­ கெ­னவே அங் மோ கியோ டவுன் சென்டர், பிடோக் டவுன் சென்டர், ஜூரோங் கேட்வே ஆகிய பகு­தி­களில் கேம­ராக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அடுத்த சில இடங்களில் தீவு முழு­வ­தும் 2,500 இடங்களில் மேலும் 11,000 கேம­ராக்­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. இத்­தகைய கேம­ராக்­கள் அமைக்­கப்­படு­வ­தால் அக்­கம்பக்­கம், பொது இடங்களில் பாது­காப்பு மேம்படும் என போலிஸ் துணை ஆணையர் லாவ் பீட் மெங் கூறினார்.

பொது இடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் போலிஸ் கேமராக்கள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!