தர்மன்: பிரிட்டனின் வெளியேற்றம் உலகப் பொருளியலை சில ஆண்டுகளாவது பாதிக்கும்

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில் இருந்து பிரிட்­டன் வில­கு­வ­தால் என்ன நடக்­கும் என்பதை இப்­போதைக்­குச் சொல்ல முடியாது என்றா­லும் நிலை­யற்ற தன்மை உலகச் சந்தை­களைப் பாதிக்­கும் என்று துணைப் பிர­த­மர் தர்மன் சண்­மு­க­ரத்­னம் கூறி­யுள்­ளார். பிரிட்­ட­னின் விலகல் குறித்த பேச்­சு­வார்த்தை­யும் விவாதங்களும் நடை­பெ­றும்­போது நிதிச் சந்தை­கள் தொடர்­நிலை­யான அதிக ஏற்ற இறக்­கங்களை எதிர்­கொள்­ளும் வாய்ப்­புள்­ளது என்றார் அவர். இதில் கவலை­ய­ளிக்­கக்­கூ­டி­யது என்­ன­வெ­னில் பிரிட்­டன் ஒன்­ றி­யத்­தில் இருந்து வெளி­யே­று­வ­தால் ஏற்­ப­டக்­கூ­டிய பொரு­ளி­யல், அர­சி­யல் நிலைத்­தன்மை­யற்ற சூழல்­கள். இந்தச் சூழல்­கள் பிரிட்­டன், ஐரோப்­பிய நாடுகள், உலகப் பொரு­ளி­யலை குறைந்தது சில ஆண்­டு­க­ளுக்­கா­வது பாதிக்­கும். அத்­து­டன் பொரு­ளி­யல் வளர்ச்­சியை­யும் இவை பாதிக்­கும் என திரு தர்மன் தெரி­வித்­தார்.

குறு­கி­ய­கால பாதிப்­பு­களைப் பொறுத்­த­வரை அவை பெரும்பா­லும் நிதிச்­சந்தை­களில்­தான் இருக்­ கும் என்ற அவர், பிரிட்­டன் வெளி­யே­று­வ­தால் நாணய மதிப்­பி­லும் பங்குச் சந்தை­களி­லும் ஏற்­ப­டக்­ கூ­டிய உட­ன­டித் தாக்கம் சிங்கப்­ பூ­ருக்கு பெரும் கவலை­ய­ளிக்­கக் கூடி­ய­தல்ல எனக் கூறினார். பிரிட்­ட­னின் வெளி­யேற்­றம், அர­சாங்க முத­லீட்டு நிறு­வ­ன­மான தெமாசெக், ஜிஐசி எனப்­படும் அரசு முத­லீட்டு நிறு­வ­னம் ஆகி­ய­வற்­றில் எத்தகைய பாதிப்பை ஏற் படுத்­தும் என்று வெஸ்ட் கோஸ்ட் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பேட்ரிக் டே நாடாளு மன்றத்­தில் எழுப்­பிய கேள்­விக்கு திரு தர்மன் பதில் அளித்­தார்.

மரீனா பே சேண்ட்சில் நடைபெறும் உலக நகரங்கள் மாநாட்டில் நேற்று கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற துணைப் பிரதமர் திரு தர்மன் சண்முகரத்னம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!