மின்தூக்கி பராமரிப்புக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும்

எல்லா நகர மன்றங்களும் மாதாந்தர சேவைப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணத்­தி­லி­ருந்து கூடு­தல் தொகையை ஆதார நிதி­யில் ஒதுக்கி வைக்­க­வேண்­டும், குறிப்­பாக மின்­தூக்­கிகளை மாற்­று­வ­தற்­காக, என தேசிய வளர்ச்சி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடா­ளு­மன்றத்­தில் தெரி­வித்­தார். வீடமைப்பு வளர்ச்­சிக் கழக அடுக்­கு­ மா­டிக் கட்­ட­டங்களில் மின்­தூக்கி பழு­தடை­யும் சம்ப­வங்களும் விபத்­து­களும் அடுத்­த­டுத்து நடந்ததைத் தொடர்ந்து இந்த அறி­விப்பு செய்­யப்­பட்­டுள்ளது. மின்­தூக்­கிகளின் பரா­ம­ரிப்பை­யும் பாது­காப்பை­யும் மேம்படுத்த கட்­ட­டக் கட்­டு­மான ஆணை­யம் அமல்­படுத்­திய நட­வ­டிக்கை­களில் இது­வும் ஒன்றா­கும். மின்­தூக்­கிகள் பழு­தடைந்த சம்ப­வங்கள் குறித்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எழுப்­பிய கேள்­வி­களுக்­குத் திரு வோங் பதி­ல­ளித்­தார்.

மின்­தூக்கி பரா­ம­ரிப்பை­யும் மின்­தூக்­கியை மாற்­றும் பணியை­யும் முடுக்­கி­வி­டு­வ­தற்­குக் கூடு­தல் செல­வா­கும் என்று திரு வோங் சுட்­டிக்­காட்­டினார். மின்­தூக்­கிகளில் கண்­டிப்­பான பரி­ சோ­தனை­களை இடை­வி­டாது மேற்­கொள்­ள­வும், தேய்ந்­து­போன பாகங்களை­யும் பழைய மின்­தூக்­கிகளை­யும் மாற்­ற­வும் போதிய நிதி இருப்­பதை உறு­திப்­படுத்த நகர மன்றங்கள் முன்­கூட்­டியே திட்­ட­மிட்­டுச் செயல்­ப­ட­வேண்­டும் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!