வங்கிக் கொள்ளையன் பேங்காக்கில் கைது

சிங்கப்பூரின் ஹாலந்து வில்லேஜ் பகுதியில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் கொள்ளையடித் ததாகக் கருதப்படும் வெள்ளைக்­காரரை தாய்லாந்து போலிசார் பேங்காக்கில் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதனை சிங்கப்பூர் போலிஸ் நேற்று உறுதிப்படுத்தியது. தாய்லாந்தின் அனைத்துலகப் போலிஸ் துறைக்கு தலைமை வகிக்கும் மேஜர் ஜெனரல் அபிசார்ட் சுரிபூன்யா தந்த தகவலின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழி கனடா நாட்டைச் சேர்ந்தவன் என்பது தெரிய வந்துள்ளது. சிங்கப்பூரில் இருந்து கடந்த வியாழக்கிழமை மாலை 5.08 மணிக்கு தாய்லாந்துக்கு வந்து சேர்ந்ததாகவும் ஞாயிற்றுக்கிழமை மதியம் விடுதி ஒன்றில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாகவும் மேஜர் ஜெனரல் அபிசார்ட் கூறினார்.

அந்த ஆடவர் மீதான சிங்கப்பூரின் கைதாணை கிடைத்த பின்னர் அவனுக்கு தாய்லாந்தில் வழங்கப்பட்டிருந்த குடிநுழைவு அனுமதி ரத்து செய்யப்பட்டதாக அவர் கூறினார். இப்போது அந்த ஆடவர் தாய் லாந்தின் குடிநுழைவுத் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப் பட்டுள்ளார். போலிசார் மேற்கொண்ட விசார ணையில் கனடிய தூதரக அதி காரியைச் சந்திக்க வேண்டும் என்று அந்த ஆடவர் கோரிக்கை விடுத் ததாகவும் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவருடைய கோரிக் கையை நிறைவேற்ற முடியவில்லை என்றும் மேஜர் ஜெனரல் அபிசார்ட் கூறினார். சந்தேகப் பேர்வழியின் பெயரை அவர் வெளியிடவில்லை.

அந்த ஆடவரை எப்போது சிங்கப்பூருக்கு அனுப்ப முடியும் என்று அவரால் உறுதியாகக் கூறமுடியவில்லை. அதற்கு நீண்ட நாள் பிடிக்காது என்றும் சில நடைமுறைகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!