கட்டாய பொட்டலமிடும் முறை

சிங்கப்பூரில் கழிவுப்பொருள் அளவைக் குறைக்கும் வகையில் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாய பொட்டலமிடும் முறையை தேசிய சுற்றுப்புற வாரியம் அறிமுகப்படுத்தவுள் ளது. கழிவுப்பொருட்களின் எடை, அளவு, எப்படிப்பட்ட பொட்டல முறை பயன் படுத்தப்படுகிறது, கழிவுப்பொருள் அளவைக் குறைக்கும் வழிகள் போன்றவை குறித்து நிறுவனங்கள் வருடாந்தர அறிக்கையை வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் புதிய முறை, தேசிய சுற்றுப்புற வாரியத்தின் சிங்கப்பூர் பொட்டல முறை உடன்பாட்டை இன்னும் ஒரு படி மேம்படுத்தும். 2007ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்ட பிணைப்பு அல்லாத இந்த உடன்பாட்டுக்கு இதுவரை 177 கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அதன் மூலம் 32,000 டன் கழிவுப் பொருட்கள் குறைக்கப்பட்டு உள்ளன. அதன் மதிப்பு $75 மில்லியன் என்றும் கூறப்பட்டது. நேற்று நடைபெற்ற 'கிளீன் என்வைரோ' எனும் தூய்மையான சுற்றுப்புறம் தொடர்பான உச்சநிலை மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற 3R பொட்டல விருதுகள் நிகழ்ச்சியில் பேசிய சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, வர்த்தகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய பொட் டல முறை பற்றி அறிவித்தார். சிறந்த பொட்டல முறையைப் பயன்படுத்தி கழிவுப் பொருட்களின் அளவைக் குறைத்ததற்காக சில நிறுவனங்களுக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!