துணி காயப்போடும் கம்பியால் உயிர் பிழைத்த ஆடவர்

11வது மாடி­யில் இருந்து விழுந்த 68 வயது ஆட­வர் ஒரு­வர் துணி காயப்­போ­டும் கம்­பி­யில் சிக்கி உயிர் பிழைத்­தார். அவ­ரது கால் சட்டை 8வது மாடி­யில் இருந்த கம்­பி­யில் மாட்­டிக் கொண்ட­தால் அவர் அந்த­ரத்­தில் தொங்­கினார். டெம்ப­னிஸ் ஸ்ட்­ரீட் 41, புளோக் 410ல் துணி காயப் ­போ­டும் கம்­பி­களில் சிக்­கி­ய­படி ஒரு­வர் அந்த­ரத்­தில் தொங்­கிக் கொண்­டி­ருப்­ப­தாக மாலை 3.30 மணி வாக்­கில் அழைப்பு வந்த­ தாக குடிமைத் தற்­காப்­புப் படை­யின்­ பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­ வித்­தார்.

8வது மாடி­யில் தொங்­கிக் கொண்­டி­ருந்த அந்த ஆட­வரை குடிமைத் தற்­காப்­புப் படை­யி­னர் பத்­தி­ர­மாக மீட்­ட­ னர். அந்த ஆட­வர் வீட்­டில் தனி­யாக இருந்த­போது சமை­ய­லறை சன்னல் வழி­யாக வெளி­யில் குதித்­து­விட்­ட­தாக அவ­ரது 34 வயது மகன் திரு சின் கூறினார். அவர் எவ்­ வி­தக் காய­மு­மின்றி உயிர்­தப்­பி­யது ஆச்­ச­ரி­ய­மாக உள்­ளது என்றார். உயிரை மாய்த்­துக்கொள்ள முயற்சி செய்­த­தாக அந்த ஆட­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் விசா­ரணை தொடர்­வ­தா­க­வும் போலிஸ் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!