பங்ளாதே‌ஷியருக்கு சிறைத் தண்டனை

சிங்கப்பூரில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டப்படி கடந்த ஏப்ரல் மாதம் தடுத்து வைக்கப்பட்ட நான்கு பங்ளாதேஷ் ஊழியர்களுக்கு நேற்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்த குற்றச்சாட்டுக்காக 24 மாதம் முதல் 60 மாதம் வரையிலான சிறைத்தண்டனை அவர்களுக்கு விதிக்கப்பட்டது. ரஹ்மான் மிஸானுர், 31, மியா ருபேல், 26, முஹம்மது ஜபாத் கைசர் ஹாஜே நூருல் இஸ்லாம் சௌடாகர், 31, சோஹெல் ஹௌ லாடர் இஸ்மாயில் ஹௌலாடர், 29 ஆகியோரே தண்டனை விதிக்கப்பட்ட நால்வர்.

இவர்கள் அனைவரும் கடந்த மே 31ஆம் தேதி தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர். பங்களாதே‌ஷில் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியளிக்கும் நோக்கில் பணத்துக்கு ஏற்பாடு செய்ததாக அல்லது பணம் வசூலித்ததாக முன்னதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் கும்பலுக்குத் தலைவனாகக் கருதப்படும் ரஹ்மான் மிஸானுருக்கு 60 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சோ ஹெலுக்கு 24 மாதச் சிறையும் எஞ்சிய இருவரில் ஒவ்வொருவருக் கும் 30 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. தண்டனை தொடங்கும் காலம் மே 27 என பின்தேதியிடப்பட்டுள்ளது. அந்த நாளில்தான் அந்த நால்வரும் முதன்முதலாக நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பங்ளாதேஷ் ஊழியர்கள் (இடமிருந்து) ரஹ்மான் மிஸானுர், 31, மியா ருபேல், 26, முஹம்மது ஜபாத் கைசர் ஹாஜே நூருல் இஸ்லாம் சௌடாகர், 31, சோஹெல் ஹௌலாடர் இஸ்மாயில் ஹௌலாடர், 29. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!