சிங்கப்பூரின் முதல் ஆசிய தலைமை அஞ்சல் அதிகாரியின் சுயசரிதை வெளியீடு

சுதாஸகி ராமன்

சிங்கப்பூரின் முதலாவது ஆசிய தலைமை அஞ்சல் அதிகாரியும் நாட்டின் மூத்த பொதுச் சேவை அதிகாரிகளில் ஒருவருமான திரு எம்.பாலசுப்பிரமணியத்தின் 'சிங்கப்பூர், எனது நாடு' எனும் சுயசரிதை நூல் நேற்று வெளி யிடப்பட்டது. முன்னொரு காலத்தில் சிங்கப்பூரின் தலைமை அஞ்சலகமாக விளங்கிய புகழ்பெற்ற ஃபுல்லர்ட் டன் கட்டடத்தில் இந்த நிகழ்ச்சி அரங்கேறியது சிறப்பம்சம். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தி னராகக் கலந்துகொண்டு உரையாற்றிய துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம், ஒரு ஒட்டு மொத்த தலைமுறையின் பிரதி நிதி திரு பாலசுப்பிரமணியன் என்று புகழ்மாலை சூட்டினார்.

"முன்னோடி சிங்கப்பூரர் களின் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர் திரு பாலசுப்பிர மணியன். அந்தத் தலைமுறை யைச் சேர்ந்தவர்கள் குறைந்த வளங்களைக் கொண்டு தொடங்கியபோதும் தங்களது குடும்பங்களுக்கும் நாட்டிற்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது," என்று திரு தர்மன் பேசினார். 99 வயதிலும் ஒரு மனிதனால் எப்படி தெளிவான மனம், தெளிவான குரலைக் கொண்டு இருக்க முடியும் என்பதைத் திரு பாலசுப்பிரமணியத்திடமிருந்து தாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்ததாகவும் அவர் சொன்னார்.

திரு பாலசுப்பிரமணியத்தின் (வலது) சுயசரிதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலின் முதல் பிரதியை அவரிடமே வழங்குகிறார் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம். சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திருமதி விஜய் தாக்கூர் சிங், சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் தலைவர் திரு கேசவபாணி, திரு பாலசுப்பிர மணியத்தின் குடும்பத்தினர், நண்பர்கள் என சுமார் 150 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். படம்: வோர்ல்ட் சயின்டிஃபிக் பப்ளி‌ஷிங்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!