இணைய தீவிரவாதிகளை முன்னரே அறியும் கருவி

வன்முறை தீவிரவாதத்தில் ஈடு படுவோரை முன்கூட்டியே அடை யாளம் கண்டு, இவர்களுக்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள உள்துறைக் குழுவின் இயல்புமுறை அறிவியல் நிலையம் புதிய கருவியைத் தயாரித்து வருகிறது. நிலையத்தின் உளவியலாளர் கள் குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையத்துடனும் போர்ட்ஸ்மத் பல்கலைக்கழகக் கல்வியாளர்களுடனும் சேர்ந்து இடர்காப்பு வினாப்படிவத்தைத் தயாரிக்கின்றனர். 'விரும்பத் தகாத தனிமனிதர்களை' அடை யாளம் காண குடிநுழைவு அதி காரிகள் பயன்படுத்தும் நேர்கா ணல் நடைமுறையை மேம்படுத்து வது இதன் நோக்கம். தேசிய வளர்ச்சி, உள்துறை மூத்த துணை அமைச்சர் திரு டெஸ்மண்ட் லீ, மூன்றாவது ஆசிய குற்றவியல், உளவியல் நடைமுறை மாநாட்டில் இவ்விவ ரத்தை அறிவித்தார்.

கிட்டத்தட்ட 300 பேர் பங்கு பெறும் மூன்று நாள் மாநாடு நொவொ டெல் சிங்கப்பூர் ஹோட் டலில் நடைபெறுகிறது. மாநாடு இன்று முடிவடையும். "நாம் ஆபத்தான காலத்தில் வாழ்கிறோம். நமது மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, நமது பாதுகாப்பு, சட்ட அமைப் புகள் உயர் விழிப்புநிலையைத் தொடர்ந்து கட்டிக்காக்க வேண் டும்," என்றார் ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பி னருமான திரு லீ. "உளவியல், இயல்புமுறை அறிவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் நமது பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு நடவ டிக்கைகளின் பயனை அதிகப் படுத்தி, நமது அரிய வளங் களின்மூலம், குறிப்பாக மக்க ளின்மூலம், அதிகபட்ச பயன் அடையலாம்," என்றும் அவர் கூறினார். புதிய திட்டம் குறித்து மேல் விவரங்கள் வெளியிடப்பட வில்லை. தற்போது ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகவும், மேல் விவரங்கள் பிற்பாடு வெளியிடப்படும் என்றும் உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!