சிங்கப்பூர் பங்குச்சந்தையின் பங்குபத்திர வர்த்தகம் வியாழக் கிழமை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல மணி நேரம் செயல்படவில்லை. அந்தச் சந்தை நேற்று வெள்ளிக்கிழமை காலை யில் வழக்க நிலைக்குத் திரும் பியது. பங்குச்சந்தை முடங்கியதற்கு காரணமான தொழில்நுட்பப் பிரச்சினைக்கு கணினி வன் பொருளே காரணம் என்று பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி லோ பூன் சை நேற்று செய்தியாளர்களிடம் விளக்கி னார். பங்குச்சந்தையின் தொழில் நுட்பத்தை நாஸ்டாக் நிறுவனம் வழங்குகிறது என்று தெரிவித்த அவர், பிரச்சினை சந்தை உள்ளிருந்து கிளம்பியதா அல்லது நாஸ்டாக்தான் காரணமா என் பதைக் குறிப்பிட மறுத்துவிட்டார்.
பங்குச்சந்தை வியாபாரத்தில் விற்பனையை உறுதிப்படுத்தும் நடைமுறை, வர்த்தக தானியக்க நடைமுறை ஆகியவை தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டதால் வியாழக் கிழமை நண்பகலுக்கு முன்பே வர்த்தகம் நிறுத்தப்பட்டது. கோளாறுக்குத் துல்லியமான காரணம் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இதற்குப் பங்குச்சந்தை முழுப் பொறுப்பை ஏற்கிறது என்று அவர் தெரிவித்தார். கோளாறுகளைச் சரிசெய்ய ஊழியர்கள் 24 மணிநேரமும் செயல்பட்டதாக அவர் கூறினார். சந்தை இப்போது வழக்கமாக செயல்படுகிறது என்றும் அவர் நேற்றுத் தெரிவித்தார்.
மீட்புப் பணிகளை இன்னும் சிறந்த முறையில் பங்குச்சந்தை செய் திருக்க முடியும் என்றார் அவர். "சந்தை வர்த்தகத்தை பழையபடி வழமை நிலைக்குக் கொண்டுவர எடுத்துக்கொண்ட நேரம் குறித்து எங்களுக்கு முழு மகிழ்ச்சி இல்லை. இது இன்னும் சிறப்பாக நடந்திருக்கவேண்டும். இனி நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்படுவோம்," என்று அவர் குறிப்பிட்டார். கோளாறு காரணமாக ஏற்பட்ட சங்கடத்துக்காக பங்குச்சந்தை சார்பில், உறுப்பினர்கள், வர்த்தகர் கள், முதலீட்டாளர்கள், பங்காளி கள் எல்லாரிடத்திலும் தான் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளவ தாக சிங்கப்பூர் பங்குச்சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.