பயங்கரவாத மிரட்டல் நீடிப்பதை உணர்த்துகிறது - பிரதமர் லீ சியன் லூங்

பிரான்சின் நீஸ் நகரத்தில் நிகழ்ந்த கொடூரத் தாக்குதல் பயங்கரவாத மிரட்டல் நீடிப்பதையே உணர்த்துவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். தனக்கு அருகில் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக் குதல்கள் தன்னை ஒருபோதும் நெருங்காது என சிங்கப்பூர் கருதிவிட முடியாது என்றும் அவர் கூறினார். 11வது ஆசிய-ஐரோப்பிய உச்ச நிலைக் கூட்டத்தில் பங்கேற்ப தற்காக மங்கோலியாவுக்கு மேற் கொண்ட நான்கு நாள் வருகை யின் முடிவில் பிரதமர் இக் கருத்துகளைத் தெரிவித்தார். 84 உயிர்களைப் பலிகொண்டு ஏராளமானோரைக் காயப்படுத் திய நீஸ் தாக்குதல் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளிக்கையில், "தாக்குதல் நடத்தப்பட்ட முறை அதிர்ச்சியை அளித்தாலும் இதற்கு முன்னர் பயங்கரவாதிகள் கார்களைப் பயன்படுத்தி உள்ளதால் இச்சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்த வில்லை,"என்றார்.

"வெடிகுண்டு வைப்பவனையோ துப்பாக்கியோடு செல்பவனையோ தடுத்துவிட முடியும். ஆனால், சமையல் கத்தியோடு செல்லும் சிலரை, கார் அல்லது லாரியில் செல்லும் சிலரை எவ் வாறு தடுக்க இயலும்?," என்று பிரதமர் வினவினார். மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்கு தல்களைக் குறிப்பிட்டுப் பேசிய திரு லீ, "இப்போதோ பிறகோ சிலர் ஊடுருவுவர் என்று நாம் எதிர்பார்க்கவேண்டும். "அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நிகழும் இச் செயல்கள் எல்லாம் மோச மானவை என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அத னால், அவற்றுக்கு எதிராக நம்மை நாமே தயார்படுத்தி, ஒரே தேச மாக நாம் நமது வாழ்க்கையைத் தொடர வேண்டும்," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!