சிங்கப்பூரர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்திக்கொள் வதன் மூலம் மொழி மீதான ஆர்வம், பற்று, உணர்வு ஆகி யவை வளர்வதாகவும் குடும்பத் தில் அனைவரும் வாசிப்பதனால் குடும்ப உறவை வலுப்படுத்த முடியும் என்றும் வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய சூழலில் இந்தி யர்கள் தமிழ் மொழியில் பேசினா லும் தமிழ் நூல்கள், செய்தித் தாள் ஆகியவற்றை வாசிக் கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப நூல்களை வாசிப்பதற்கு வாய்ப்பு கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேசிய வாசிப்பு இயக்கத்தை முன்னிட்டு தொடர்பு, தகவல் அமைச்சு, தேசிய நூலக வாரியம் ஆகியன இணைந்து நேற்று தோ பாயோ பொது நூலகத்தில் ஏற்பாடு செய்திருந்த 'SGfuture' கலந்துரையாடலில் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்ட திரு ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசினார். "இணையத்தில் ஏராளமான மின்நூல்கள் இருந்தாலும் வாச கர்கள் அவற்றைப் பெற்று வாசிக்க வைப்பது சவாலாக அமைந்தாலும் வாசிக்கும் பழக் கத்தை வாழ்க்கையின் ஓர் அங்க மாக இணைத்துக் கொள்வதனால் ஏற்படும் பலதரப்பட்ட பலன்களை அவர்கள் அறிந்துகொள்ள வேண் டும்," என்று அமைச்சர் கூறினார். கல்வி அமைச்சு, சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 30 பேர் பங்கேற்ற இக்கலந்துரையாடலில் தமிழ்மொ ழியில் எவ்வாறு வாசிக்கும் பழக் கத்தை ஊக்குவிக்கலாம் என்பது குறித்து அலசி ஆராயப்பட்டது. வாழ்க்கையின் எல்லா நிலை களிலும் கற்பது, ஒரு சமூகமாக வாழ்நாள் கற்றலை ஊக்குவிப்பது, எதிர்காலத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்ய கற்பது என மூன்று தலைப்புகளையொட்டி சிறு குழுக் களாகப் பிரிக்கப்பட்டு பங்கேற் பாளர்கள் கலந்தாலோசித்தனர்.
கலந்துரையாடலில் முன் வைக்கப்பட்ட சில பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் வாசிக் கும் பழக்கம் உருவாகும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித் தனர். நூலகத்தில் புத்தகங்களை அவற்றின் கடினத்துக்கேற்ப வகைப்படுத்தலாம் என்று யோசனை தெரிவித்தார் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை உறுப்பின ரான த. சந்திரலேகா, 22. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்த கலந்துரையாடலில் அமைச்சர் ஈஸ்வரனுடன் கல்வி, தொடர்பு தகவல் துணை அமைச் சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி, செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தமிழ் மொழியில் வாசிக்கும் பழக்கத்தை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பது குறித்து பங்கேற்பாளர்கள் கலந்தாலோசிப்பதை அமைச்சர் எஸ். ஈஸ்வரன் பார்வையிடுகிறார். படம்: திமத்தி டேவிட்