1எம்டிபி விவகாரம் தொடர்பில் வங்கிகளை ஆராய்கிறது சிங்கப்பூர் நாணய ஆணையம்

சிங்கப்பூரின் மத்திய வங்கி, மலேசியாவின் அரசாங்க நிதி அமைப்பான 1MDB தொடர்பில் இங்குள்ள பல்வேறு வங்கிகளை ஆராய்ந்து வருகிறது. ஆராயப்படும் வங்கிகளில் யூபிஎஸ், டிபிஎஸ் குரூப் ஹோல் டிங்ஸ் ஆகியவையும் அடங்கும். மலேசியாவின் அரசாங்க நிதி அமைப்பான 1MDB நிதித் தில்லு முல்லுகளில் தொடர்புடைய பட்டு வாடாக்களைக் கையாண்டு இருப் பதில் கள்ளப் பணத்திற்கு எதிரான விதிமுறைகளை இந்த வங்கிகள் மீறி இருக்கின்றனவா என்பதைக் கண்டுபிடிக்க விசாரணை நடந்து வருகிறது. வங்கிகளின் பல்வேறு நடவடிக்கைகளையும் சிங்கப்பூரின் மத்திய வங்கியான சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

வாடிக்கையாளர்கள் யார் என்பதை பற்றி வங்கிகளுக்குத் தெரியுமா, அந்த வாடிக்கையாளர் களுக்குப் பணம் எப்படி வந்தது என்பது பற்றிய விவரங்கள் போதிய அளவுக்கு அவர்களுக்குத் தெரியுமா, என்பதை எல்லாம் மத்திய வங்கி ஆராய்ந்து வரு கிறது. அரசாங்க அதிகாரிகள் போன்ற அரசியல் ரீதியில் அம்பல மாகியிருக்கும் நபர்களைப் பரி சோதித்ததில் வங்கிகள் கவனமாக இருந்து உள்ளனவா என்பனவற்றை எல்லாம் மத்திய வங்கி விசாரித்து வருகிறது. குறைபாடுகள் கண்டறியப்பட் டால் அபராதங்கள், தண்டத் தொகை விதிக்கப்படலாம் என்று தம்மை யார் என்று குறிப்பிடாத தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!