காற்பந்துச் சூதாட்டம்: 39 பேர் கைது

சட்டவிரோத காற்பந்துச் சூதாட் டத்தில் ஈடுபட்டதாகச் சந்தேக நபர்கள் 39 பேரை சிங்கப்பூர் போலிசார் கைது செய்துள்ளனர். அனைத்துலக போலிசான 'இன்டர்போல்' தலைமையில் அனைத்துலக அளவில் மேற்கொள் ளப்பட்ட கைது நடவடிக்கைகளின் ஒரு பகுதி இது. இதில், உலக அளவில் 4,000க்கும் மேற்பட்டோர் பிடிபட்டதாகவும் ஆசியாவில் மட்டும் $13 மி. தொகைக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் கைதான 39 பேரும் சட்டவிரோத சூதாட்டத்திற் காக $2.5 மில்லியனுக்கும் அதிக மான தொகையை வசூலித்ததாக சிங்கப்பூர் போலிஸ் படை கூறியது. அவர்களிடமிருந்து ரொக்க மாக $650,000 பணமும் கணினி கள், மடிக்கணிகள், கைபேசிகள் உட்பட சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத் தப்பட்ட சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், சந் தேக நபர்களின் வங்கிக் கணக்கு களிலிருந்து $810,000க்கும் அதிக மான பணத்தையும் போலிசார் கைப்பற்றினர். சந்தேக நபர்கள் மீதான விசாரணை தொடர்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!