வில்சன் சைலஸ்
சாங்கி விமான நிலைய கனவை நனவாக்க உதவியது உட்பட பல விதங்களில் சிங்கப்பூரின் முன் னேற்றத்திற்குப் பாடுபட்டுள்ள அமரர் டாக்டர் ஆறுமுகம் விஜய ரத்னத்தின் சுயசரிதை (படம்) நேற்று வெளியிடப்பட்டது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 3வது தெற்காசிய புலம்பெயர்ந்தோர் மாநாட்டில் 'என்ஜினியர்ட் ஃபார் சக்சஸ்' என்ற தலைப்பில் சிங்கப்பூரின் முதல் பொறியாளர் என்ற பெருமைக்குரிய டாக்டர் விஜயரத்னம் குறித்த நூல் அறி முகம் கண்டது.
சிறப்பு விருந்தினராக மாநாட் டில் கலந்துகொண்ட இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உட்பட நூற்றுக்கணக்கானோரின் முன்னிலையில் அதிகாரபூர்வமாக நூலை வெளியிட்டார் துணைப் பிரதமரும் பொருளியல், சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கி ணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முகரத்னம். மலேசியாவின் ஈப்போவில் 1921ஆம் ஆண்டு பிறந்த டாக்டர் விஜயரத்னம் சிங்கப்பூருக்கு வந்த பிறகு, விக்டோரியா பள்ளியில் பயின்று, பின் அரசு உபகாரச் சம்பள உதவியுடன் பிரிட்டனில் உள்ள பிரைட்டன் தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டடப் பொறியியல் படிப்பை முடித்தார்.