லிம் சூ காங் படகுத் துறையில் இறந்து கிடந்த மீன்கள்

லிம் சூ காங் படகுத் துறையில் நேற்று பெருமளவில் மீன்கள் இறந்து கிடந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. அருகிலிருந்த குப்பைத் தொட் டியிலிருந்த நிறைய கறுப்பு பிளாஸ்டிக் பைகளிலிருந்தும் இறந்த மீன்களிலிருந்தும் கடுமை யான துர்நாற்றம் அந்த இடத்தில் வீசியதாக சொல்லப்பட்டது. வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணையத்தின் படகு ஒன்று படகுத் துறையில் நின்று கொண்டிருந்ததாகவும் தெரி விக்கப்பட்டது. மேலும், நேற்று சுங்காய் புலோ ஈரநிலப் பகுதியிலும் இறந்த மீன் களைப் பார்த்ததாகவும் ஆனால் குறைந்த எண்ணிக்கையில் அவை காணப்பட்டதாகவும் ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

பூங்காக்களிலும் அல்லது நீர்த்தேக்கங்களிலும் பெருமளவில் மீன் இறந்து கிடப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வறண்ட வானிலை காரணமாக பீஷான்- அங் மோ கியோ பூங்கா வின் ஒடையில் நூற்றுக்கணக் கான மீன்கள் இறந்து கிடந்தன.

லிம் சூ காங் படகுத் துறைக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் மடிந்த மீன்கள் மிதந்துக் கிடந்தன. அதன் கரையோரங்களிலும் அவற்றில் பல ஒதுங்கியிருந்தன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!