தேசிய கலைக்கூடத்தைப் பார்வையிட்ட இலங்கைப் பிரதமர்

சுதாஸகி ராமன்

இரண்டாவது முறையாக தேசிய கலைக்கூடம் பிரதமர் ஒருவரால் பார்வையிடப்பட்டது. சிங்கப் பூருக்கு மூன்று நாள் அதிகாரத்துவ பயணத்தை மேற்கொண்ட இலங் கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று தேசிய கலைக்கூடத்திற்கு வருகை தந்தார். தேசிய கலைக்கூடத்தை மொண்டினேக்ரோவின் பிரதமர் இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் பார்வையிட்டார். மரபுடைமை, கட்டடங்கள், கலைப்படைப்புகள் ஆகியவற்றின் பழமைப் பாதுகாப்பு குறித்து மேலும் அறிந்துகொள்ளும் நோக் கில் தேசிய கலைக்கூடத்தைச் சுற்றிப்பார்த்த பிரதமர் ரணில், அங்கு சிங்கப்பூரின் வரலாறு பற்றியும் தெரிந்துகொண்டார்.

தேசிய கலைக்கூடத்தின் கண்காட்சிகளில் வைக்கப்பட்ட முக்கியமான ஓவியங்களைப் பார்வையிட்ட திரு ரணிலோடு இலங்கைக்கான சிங்கப்பூர் தூதர் திரு எஸ் சந்திரதாஸ், கல்வி, தகவல் தொடர்பு துணை அமைச்சர் திரு ஜனில் புதுச்சேரி ஆகியோரும் இருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு தேசிய கலைக்கூடத்தின் கண் காட்சி அறைகளை வலம் வந்தார் திரு ரணில். முன்னர் தலைமை நீதிபதியின் அறையாக இருந்த கண்காட்சி அறை ஒன்றில் விருந்தினர் புத்தகத்தில் அவர் கையெழுத்திட்டார்.

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு (இடது) சிங்கப்பூர் கலைக்கூடத்தின் அம்சங்களை விளக்குகிறார் அதன் மூத்த பொறுப்பு அதிகாரி திரு ஷபிர் ஹுசேன் முஸ்தஃபா (நடுவில்). இலங்கைக்கான சிங்கப்பூர் தூதர் திரு எஸ். சந்திரதாஸ், கல்வி, தகவல் தொடர்பு துணை அமைச்சர் திரு ஜனில் புதுச்சேரி ஆகியோரும் உடன் இருந்தனர். படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!