சக்கர நாற்காலிப் பயணிகளுக்கு புதிய பேருந்து வசதி

இம்மாதம் 20ஆம் தேதியிலிருந்து சக்கர நாற்காலிப் பயணிகளும் கரையோரப் பூந்தோட்டங்களை சுற்றிவந்து ரசிக்க முடியும். அன்றைய தினத்திலிருந்து இவர்களுக்காகவே புதிய பேருந்து வசதி அறிமுகமாகிறது. பொதுப் போக்குவரத்து நிறு வனமான எஸ்எம்ஆர்டியின் ஆதர வில் 22 இருக்கைகள் கொண்ட பேருந்தில் சக்கர நாற்காலிப் பயணிகளும் பயணம் செய்வதற்கு ஏதுவாக மடக்கக்கூடிய சாய் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்துப் பேசிய கரை யோரப் பூந்தோட்டங்களின் தலை மை நிர்வாகி டாக் கியட் டபிள்யூ டான், "பூந்தோட்டங்களை அனை வரும் ரசிக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்," என்றார். ஏற்கெனவே செயல்படும் 14 இருக்கைகள் கொண்ட வாகனங் கள் மேம்படுத்தப்பட்டு புதிய பேருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!